முப்பத்தேழாவது
சோழனை மடுவில் வீட்டிய படலம்
|
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
மின்னனை
யார்பூங் கொன்றை வேணிய ரிரத வாதம்
பொன்னனை யாண்முன் செய்து போந்தது புகன்றே மார்த்தார்
மன்னனை மடுவில் வீட்டி மலரடிக் கன்ப னான
தென்னனை யமரிற் காத்த திருவிளை யாடல் சொல்வாம். |
(இ
- ள்.) நனை ஆர் பூங் கொன்றை மின்வேணியர் - தேன் நிறைந்த
கொன்றை மலர் மாலையை யணிந்த மின்போலும் சடையையுடைய
சோமசுந்தரக் கடவுள், பொன்னனையாள்முன் இரதவாதம் செய்து போந்ததது
புகன்றேம் - பொன்னனையாள் முன்னர் இரசவாதஞ் செய்து சென்றருளிய
திருவிளையாடலைக் கூறினோம்; ஆர்தார் மன்னனை - (இனி)
ஆத்திமாலையை யணிந்த சோழமன்னனை, மடுவில்வீட்டி - மடுவின்கண்
வீழ்த்தி, மலர் அடிக்கு அன்பன் ஆன தென்னனை - மலர்போன்ற
திருவடிகட்கு அன்பனாகிய சுந்தரபாத சேகர பாண்டியனை, அமரில் காத்த
திருவிளையாடல் சொல்வாம் - போரின்கண் காத்தருளிய திருவிளையாடலைக்
கூறுவாம்.
மின்போலும்
வேணி என்க; சித்தராய் வந்து தோன்றி மறைதலின்
மின்னையொத்தவராகிய வேணியர் என்றுரைத்தலுமாம். வீட்டி, வீழ்த்தி
என்பதன் மரூஉ. (1)
பொன்னெடுந் தேரி ராச புரந்தரன் பரந்த ராதி
மன்னெடுந் தேவ ரேத்தப் பரனுல கடைந்தா னிப்பால்
அந்நெடுந் தகையோன் மைந்த னடலிரா சேசனென்போன்
இந்நெடுந் தகையோன் மைந்த னிராசகம் பீர னென்போன். |
(இ
- ள்.) பொன் நெடுந் தேர் இராச புரந்தரன் - பொன்னாலாகிய
பெரிய தேரினையுடைய இராசேந்திர பாண்டியன். புரந்தர ஆதி பல் நெடும்
தேவர் ஏத்த - இந்திரன் முதலிய பல கெரிய தேவர்களும் புகழ, பரன்
உலகு அடைந்தான் - சிவலோகமடைந்தனன்; இப்பால் - பின், இந்நெடுந்
தகையோன் மைந்தன் - அப்பெரிய தகுதியை யுடையான் புதல்வன், அடல்
இராசேசன் என்போன் - வெற்றியையுடைய இராசேச பாண்டியன் என்று
சொல்லப்படுவோன்; அநெடுந் தகையோன் மைந்தன் - இந்த நெடுந்தகையின்
மகன், இராச கம்பீரன் என்போன் - இராச கம்பீரனென்று சொல்லப்படுவோன். (2)
|