மற்றிவன் குமரன் வங்கிய தீப னன்னான்
பொற்றிணி தடந்தோண் மைந்தன் புரந்தர சித்தா மன்னான்
வெற்றிகொள் குமரன் பாண்டி வங்கிய பதாகன் வீரம்
பற்றிய சுந்த ரேச பாதசே கரன வன்சேய். |
(இ
- ள்.) இவன் குமரன் - இந்த இராச கம்பீரபாண்டியன் புதல்வன்,
பாண்டிவங்கிய தீபன் - பாண்டிவங்கிய தீபனென்பவன்; அன்னான்
பொன்திணி தடந்தோள் மைந்தன் - அவனுடைய பொன்னிறம் வாய்ந்த
திண்ணிய பெரிய தோள்களை யுடைய புதல்வன், புரந்தரசித்தாம் -
புரந்தரசித்து என்பான்; அவன் சேய் - அவன் மைந்தன், வீரம் பற்றிய -
வீரத்தைப் பொருந்திய, சுந்தரேச பாதசேகரன் - சுந்தரேச பாத சேகர
னென்பவன்.
மற்று
: அசை. வங்கியம் - வமிசம். (3)
பலர்புகழ் சுந்த ரேச பாதசே கரனாந் தென்னன்
அலைபுன லுடுத்த கூட லடிகளுக் கன்ப னாகிக்
கொலைபுணர் வேலால் வெங்கோற் குறும்பெனும் களைக டீர்த்து
மலர்தலை யுலக மென்னும் வான்பயிர் வளர்க்கு நாளில். |
(இ
- ள்.) பலர்புகழ் சுந்தரேச பாதசேகரனாம் தென்னன் - பலரும்
புகழ்கின்ற சுந்தரேச பாதசேகரன் என்னும் அப்பாண்டியன், அலைபுனல்
உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பனாகி - அலையும் நீரையுடைய வையை
சூழந்த கூடலின்கண் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளுக்கு அன்பனாகி, கொலைபுணர் வேலால்
- கொலைத் தொழில் பொருந்திய வேற்படையால்,
வெங்கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து - கொடுங் கோலையுடைய
குறுநில மன்னரென்னுங் களைகளைப் போக்கி, மலர்தலை உலகம் என்னும்
வான்பயிர் வளர்க்கு நாளில் - பரந்த இடத்தையுடைய உலகிலுள்ள உயிர்கள்
என்னுஞ் சிறந்த பயிரை வளர்க்கு நாளில்.
சுட்டு
வருவிக்க. குறும்பு - குறுநில அரசு. உலகம் ஈண்டு உயிர்களை
யுணர்த்திற்று. வளர்க்கலுற்றான் அங்ஙனம் வளர்க்கு நாளில் என
விரித்துரைக்க. (4)
பத்துமான் றடந்தேர் நூறு பனைக்கைமா நூற்றுப் பத்துத்
தத்துமா னயுத மள்ளர் தானையிவ் வளவே யீட்டி
இத்துணைக் கேற்ப நல்கி யெஞ்சிய பொருள்க ளெல்லாஞ்
சித்துரு வான கூடற் சிவனுக்கே செலுத்து மன்னோ. |
(இ
- ள்.) மான்தடந் தேர்பத்து - குதிரை பூட்டிய பெரிய தேர் பத்தும், பனைக்கைமாநூறு
- பனைபோன்ற துதிக்கையையுடைய யானைகள் நூறும்,
தத்துமான் நூற்றுப் பத்து - தாவுகின்ற குதிரைகள் ஆயிரமும், மள்ளர் அயுதம்
- காலாள் பதினாயிரமு மாகிய, இவ்வளவே தானை ஈட்டி -
|