பக்கம் எண் :

திருநகரங்கண்ட படலம்301



     (இ - ள்.) அரசன் அன்று தொட்டு - மன்னன் அன்றுமுதல், அந்நகர்
எய்தி - அம்மதுரை நகரை அடைந்து, அணிகெழு மங்கலம் இயம்ப - அழகு
பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, என்று தொட்டுஇமைக்கும்
மனையில் - சூரியனை அளாவி ஒளி வீசும் அரண்மனையில், மங்கல நாள்
எய்தினான் இருந்து - நன்னாளிற் புகுந்து இருந்து, முப்புரமும் குன்று
தொட்டு எய்தான் - மூன்று புரங்களையும் பொன் மலையை வில்லாக
வளைத்து அழத்த இறைவனது, கோயில் - திருக்கோயிலில், மூன்று உறுப்பும்
குறைவு இல் பூசனை - மூன்று அங்கங்களும் குறைவில்லாத பூசனையானது,
வழாது ஓங்க - வழுவாமல் மேலோங்க, கன்று தொட்டு எறிந்து கனி
உழுத்தான் போல் - கன்றினைப் பிடித்து வீசி விளாங்கனியை வீழ்த்திய
திருமாலைப்போல, கலி துரந்து அரசுசெய் நாளில் - தீமையை யோட்டி அரசு
புரிந்து வரும் நாளில் எ - று.

     என்று - சூரியன். எய்தினான் : முற்றெச்சம். ன்றுறுப்பாவன : -
நித்தியம், நைமித்திகம், பிராயச்சித்தம் என்பன. கண்ணன் நிரை
மேய்க்கின்றபொழுது கஞ்சனுக்கு நண்பனாகிய அசுரனொருவன் அவனைக்
கொல்லவென வந்து ஓர் ஆன் கன்றில் ஆவேசித்திருக்கக் கண்ணன்
அஃதறிந்து அக்கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விள
வின்கனிமீதெறிந்து அவனைக் கொன்றானென்பது வரலாறு; சிலப்பதிகார
ஆய்ச்சியர் குரவையில்,

"கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்"

என வருதலுங் காண்க. உலகம் புரக்கும் அரசன் காத்தற் கடவுளாகிய
திருமாலின் அமிசமென்ப வாகலின் அவன்போல் என்றார்;
   

  "திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்"

என்கிற ஆழ்வார் வாக்குங் காண்க. (46)

பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம்
     பரப்பிளம் பரிதிபோன் மலயத்
துவசனைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ்
     சுமத்திநாள் பலகழித் தொருநாள்
நவவடி விறந்தோ னாலயத் தெய்தி
     நாதனைப் பணிந்துமூ வலஞ்செய்
துவமையி லின்ப வருணிழ லெய்தி
     யொன்றியொன் றாநிலை நின்றான்.

     (இ - ள்.) பவநெறி கடக்கும் பார்த்திவன் - பிறவிக்குக் காரணமாகிய
வழியினைக் கடக்கின்ற பாண்டியன், கிரணம் பரப்பு இளம் பரிதிபோல் -
ஒளியை விரிக்கின்ற இள ஞாயிறுபோலும், மலயத்து வசனைப் பயந்து -
மலயத்துவச னென்பவனைப் பெற்று, மைந்தன்மேல் ஞாலம் சுமத்தி -
அப்புதல்வன் மீது அரசபாரத்தைச் சுமத்தி, பலநாள் கழித்து ஒருநாள் -
பலநாட் போக்கி ஒருநாள், நவவடிவு இறந்தோன் - ஒன்பது வடிவங்களையுங்
கடந்த சோம சுந்தரக் கடவுளின், ஆல பத்து எய்தி - திருக்கோயிலுள்