பக்கம் எண் :

302திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சென்று, நாதனைப் பணிந்து - இறைவனை வணங்கி, மூவலம் செய்து -
மும்முறை வலம் வந்து, உவமை இல் - ஒப்பில்லாத, இன்ப அருள் நிழல்
எய்தி - பேரின்பமயமாகிய திருவருள் நீழலையடைந்து, ஒன்றி ஒன்றா நிலை
நின்றான் - சேர்ந்தும் சேராத இரண்டற்ற நிலையில் நின்றான் எ - று.

     பார்த்திவன் - அரசன்; பிருதிவியை ஆளுபவன் என்பது பொருள்.
ஞாலம் - பூமி : ஈண்டு அரசபாரம் எனக் கொள்க. கழித்து : கழிய வென்பது
திரிந்ததுமாம். நவவடிவு முற்கூறப்பட்டன: ‘நவந்தரு பேத மேக நாதனே
நடிப்பன்’ என்றதனால் இறைவன் அவற்றுக்கு அப்பாற்பட்டவனென்க துணர்க. ஒன்றி இரண்டறக் கலந்து, ஒன்றாம் நிலை நின்றான் - அவ்வத்துவித
நிலையில் நின்றான் எனப் பொருளுரைத்தலுமாம். (47)

ஆகச் செய்யுள் - 517.