சுந்தரபாத சேகர பாண்டியன்,
பிலத்து அளவு ஆழ்ந்த கடிமலர் கிடங்கில்
அவிந்தவன் - பாதலம்வரை ஆழ்ந்துள்ள மணமிக்க மலர்களையுடைய
அகழியில் வீழ்ந்து இறந்த சோழனுடைய, துகில் பூண் - ஆடையும் அணியும்,
கலத்து அரும் பேழை - அரிய அணிகலப் பெட்டியும், படை பரிமான் தேர்
கரிஎலாம் கவர்ந்து - காலாளும் குதிரையும் தேரும் யானையும் ஆகிய
இவையெல்லாவற்றையும் கொண்டு, தங்கள் நாயகர் அணியத்தக்க தூசு
அணிகலன் நல்கி - தங்கள் தலைவராகிய சோமசுந்தரக் கடவுள்
அணியத்தக்க ஆடைகளையும் அணிகலங்களையும் தந்து, நலத்தகையவர்
பேர் அருள் கடற்கு - உயிர்களுக்கு நன்மையே புரியுந் தகுதியையுடைய
அவ் விறைவரது பேரருளாய கடலுக்கு, அன்பு நதி எனப் பெருகி
வீற்றிருந்தான் - தனது அன்பானது ஆறு போலப் பெருக வீற்றிருந்தான்.
பெருந்தகை
என்பதனைப் பிரித்துக் கூட்டுக. கடி - காவலுமாம்.
அன்பு அன்பினாலே திருவருளைத் தலைக்கூட வேண்டுதலின் 'அருட்
கடற்கு அன்பு நதியெனப் பெருகி' என்றார். பெருகி - பெருக. (22)
ஆகச்செய்யுள் - 9907.
|