பக்கம் எண் :

உலவாக்கோட்டை யருளிய படலம்313



     (இ - ள்.) அன்பன் அடியார்க்கு இனியான் - அன்பனாகிய அடியார்க்கு நல்லான், தன் பன்னியொடும் - தன் மனைவியோடும், அயலார் சுற்றம்
தமரோடும் - பக்கத்திலுள்ளார் சுற்றத்தார் நட்டார் என்னும் இவர்களோடும்,
நனிநாள் அளந்து அல்கி - நீண்ட நாள் அறஞ் செய்திருந்து, பின்பு - அதன்
பின்னர், அந்நிலையே - அங்கிருந்தவாறே, இமவான் மகளைப் பிரியாத
இன்பன் உருவாய் - மலைமகளைப் பிரியாத இன்ப வடிவினனாகிய
சிவபெருமான் உருவாகி, சிவமாநகர் சென்று இறை கொண்டான் - பெருமை
பொருந்திய சிவபுரமெய்தித் தங்குதலுற்றான்.

     அளந்து - அறஞ்செய்து; நாட்களை அளந்து என்றுமாம் - அந்நிலையே - கடவ நாட்கழித்த அப்பொழுதே என்றுமாம். உரு - சிவசாரூபம். இமவான்
மகளைப் பிரியாத இன்பன் உருவாய் என்றமையால் அவன் பத்தினி உமையின்
சாரூபம் பெற்றமையும் கொள்க. இறை கொண்டான் - ஒரு பெற்றியே இன்பம்
நுகர்ந்திருந்தான். (18)

                     ஆகச் செய்யுள் - 1925.