முப்பத்தொன்பதாவது
மாமனாகவந்து வழக்குரைத்த படலம்
|
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
தாமநா
றிதழ யார்தந் தமர்க்கன்பன் வறுமைப் பட்டோன்
ஆமநா ளுலவாக் கோட்டை யருளிய முறையீ தையன்
தேமனான் முல்லைத் தீந்தார்ச் சிறுதகை வணிகற் காக
மாமனாம் படிவங் கொண்டு வழக்குரை வண்ணஞ் சொல்வாம். |
(இ
- ள்.) நாறு தாம இதழியார்தம் தமர்க்கு அன்பன் - மணங் கமழும் கொன்றை
மாலையையணிந்த இறைவன் தம்முடைய அடியார்க்கு நல்லான்,
வறுமைப் பட்டோன் ஆம் அ நாள் - வறுமையுடையனாகிய அந்த நாளில்,
உலவாக் கோட்டையருளிய முறை ஈது : உலவாக் கோட்டையருளிய
திருவிளையாடல் இது; ஐயன் - அப்பெருமான், தேம் மன்நாள் முல்லைத்
தீந்தார் - தேன் பொருந்திய அன்றலர்ந்த முல்லை மலராகிய இனிய
மாலையயணிந்த, சிறு தகை வணிகற்கு ஆக - இளம்பருவமுடைய சொல்வாம்
- அவனுக்கு மாமனாகிய வடிவந்தாங்கி வந்து வழக்குரைத்த
திருவிளையாடலை (இனிக்) கூறுவாம்.
தாமம்
நாறு இதழி என்பதற்கு மாலை போலத் தோன்றும்
கொன்றைத்துணர் என்றுமாம். அநாள் : தொகுத்தல். தகை - பருவத்தை
யுணர்த்திற்று. (1)
கன்னிநான் மாடக் கூடற் கடிநகர் வணிக மாக்கள்
தன்னின்மா நிதிக்கோ னன்னான் றனபதி யென்னும் பேரான்
மன்னினா னனையான் கற்பின் மடவரல் சுசீலை யென்பாள்
பொன்னினாண் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவி னன்னாள். |
(இ
- ள்.) கன்னிநான் மாடக் கூடல் கடிநகர் - என்றும் அழியாத
நான்மாடக் கூடலென்னுங் காவலையுடைய மதுரைப் பதியின்கண் வசிக்கும்,
வணிக மாக்கள் தன்னில் - வாணிக மக்களுள், மாநிதிக் கோன் அன்னான் -
குபேரனையொத்த செல்வமுடையனாகிய, தனபதி என்னும் பேரான்
மன்னினான் - தனபதி என்னும் பெயரினையுடைய ஒருவன் இருந்தான்;
அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள் - அவனுடைய
கற்பினையுடைய மனைவி சுசீலை என்னும் பெயரினையுடையாள்; பொன்னின்
நாள் முளரிச் சேக்கை - பொன் போன்ற புதிய தாமரை மலராகிய தவிசில்
இருக்கும், புண்ணியத் திருவின் அன்னாள் - புண்ணிய வடிவாகிய
திருமகளையொத்தவள்.
|