திருநாட்டுச்
சிறப்பு
[கலிநிலைத்துறை]
|
கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளொதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம். |
(இ - ள்.) கறைநிறுத்திய
- விடக்கறையினை நிலவச்செய்த,
கந்தரம் - திருமிடற்றினையுடைய, சுந்தரக்கடவுள் - சோமசுந்தரக்கடவுள்.
வழுதியாய் - பாண்டி வேந்தாகி, உறை நிறுத்திய வாளினால் - உறையில்
நிறுத்தியுள்ள வாட்படையாகிய ஒளியால், பகை இருள் ஒதுக்கி -
பகையாகிய இருளை யொழியச்செய்து, மறை நிறுத்திய வழியினால் -
வேதங்களிற் கூறி நிறுத்தப்பட்ட வழியினால், செங்கோல் முறை நிறுத்திய -
நீதிமுறையை நிலைபெறுத்தி ஆண்டருளிய, பாண்டி நாட்டு அணி
மொழிவாம் - பாண்டித்திருநாட்டின் சிறப்பினைக் கூறுவாம் எ - று.
பாற்கடல் கடைந்தபொழுது உண்டாகிய
ஆலகாலம் என்னும்
கொடுவிடத்திற் காற்றாது அமரரெல்லாரும் அஞ்சிச் சரண்புக, சிவ
பெருமான் அதனையுண்டு, முடிவிலாற்றலும், பேரருளுமுடைய முதற்கடவுள்
தானே என்பதனை எக்காலத்தும் யாவர்க்கும் அறிவுறுத்தி உய்விக்கும்
பொருட்டாக அதனைத் திருமிடற்றிலே நிலைபெறுத்தி நீலகண்டன் என்னும்
திருப்பெயருடன் விளங்குகின்றான் ஆகலின், கறைநிறுத்திய கந்தர சுந்தரக்
கடவுள் என்றார். கந்தரம் - தலையைத் தாங்குவது என்னும் பொருளது.
வாள் - இரட்டுற மொழிதலால் ஒளியும் ஆம். தான் வகுத்தருளிய
மறைநெறியினின்று யாவரும் மாறுபடா தொழுகுதற்பொருட்டுத் தானே
அந்நெறி நின்று செங்கோலோச்சிக் காட்டினன் என்பார் மறை நிறுத்திய
வழியினால் முறை நிறுத்திய என்றார். முறை நிறுத்திய என்னும் பெயரெச்சம்
பாண்டி நாடென்னும் நிலப்பெயர் கொண்டது. அணியது - அது
பகுதிப்பொருள் விகுதி. (1)
தெய்நாயக னீறணி மேனிபோற்
சென்று
பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான்* சுரந்திடு மின்னரு ளென்னக்
கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரன் மேகம். |
(இ
- ள்.) கனைகுரல் மேகம் - ஒலிக்கின்ற குரலையுடைய
மேகங்கள், தெய்வநாயகன் - தேவர்களுக்குத் தலைவனாகிய சிவ
பெருமானின், நீறு அணி மேனி போல் சென்று - திருநீறு அணிந்த திரு
மேனி போலும் (வெண்ணிறத்தோடு) சென்று, பௌவம் மேய்ந்து - கடல்
நீரைப்பருகி, உமை மேனிபோல் பசந்து - உமாதேவியாரின் திரு மேனி
போலும் பசிய நிறங்கொண்டு, பல் உயிர்க்கும் - பலவகைப் பட்ட
உயிர்களுக்கும், எவ்வம் மாற்றுவான் - பிறவித் துன்பத்தை நீக்குதற்
பொருட்டு, சுரந்திடும் இன்அருள்
(பா - ம்.) * எவ்வமாற்றுவான்.
|