பக்கம் எண் :

330திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நங்கோமகன் செங்கோல்பிழைத் தனனோவென நவில்வார்
அங்கோல்வளை பங்கன்விளை யாட்டோவென வறைவார்
இங்காரிது தணிப்பாரென விசைப்பாரிது தணிப்பான்
பொங்காலமுண் டருள்சுந்தர னலதியாரெனப் புகல்வார்.

     (இ - ள்.) நம் கோமான் செங்கோல் பிழைத்தனனோ என நவில்வார்
- (பின்னும்) நமது மன்னன் நீதி முறை தவறினனோ என்று கூறுவார்;
அம்கோல் வளை பங்கன் விளையாட்டோ என அறைவார் - அழகிய
திரண்டவளையலை யணிந்த உமையம்மையின் ஒரு கூறனாகிய சோம
சுந்தரக்கடவுளின் திருவிளையாடலோ என்று சொல்லுவார்; இது தணிப்பார்
இங்கு யார் என இசைப்பார் - இவ்வெள்ளத்தை வற்றச் செய்பவர்
இந்நிலவுலகில் யாவருளர் என்று கூறுவார்; இது தணிப்பான் - இதனைத்
தணிக்கின்றவன், பொங்கு ஆலம் உண்டருள் சுந்தரன் அலது யார்
எனப்புகல்வார் - கொதித்தெழுந்த ஆலாலம் என்னும் நஞ்சினை
உண்டருளிய சோம சுந்தரக்கடவுளையல்லாது வேறுயாவருளர் என்று
புகல்வார்.

     காவலன் முறை தவறிந் இயற்கையல்லன செயற்கையிற்றோன்றுமாகலின்
‘நங்கோமகன் செங்கோல் பிழைத்தனனோ’ என்றனரென்க. யார் ஆரென
மருவிற்று. அலதியார், குற்றிய லிகரம் அலகுபெறாது நின்றது. (63)

அடுத்தாயிரங் குண்டோதர ரெதிரேற்றிருந் தகல்வாய்
மடுத்தாலுமி தடங்காதென மதிப்பாரிது தனையும்
எடுத்தாயிர முககங்கையி னிறைவன்சடை யேறக்
கொடுத்தாலல தடங்காதிதன் கொடுங்கோபம தென்பார்.

     (இ - ள்.) ஆயிரம் குண்டோதரர் அடுத்து எதிர் ஏற்று இருந்து -
அளவிறந்த குண்டோதரர்கள் இதனை அடுத்து எதிரே மறித்து நின்று,
அகல்வாய் மடுத்தாலும் இது அடங்காது என மதிப்பார் - அகன்ற தங்கள்
வாய்களை வைத்துப்பருகினாலும் இது அடங்காதென்று கருதுவார்; ஆயிரமுக
கங்கையின் - ஆயிரமுகங்களையுடைய கங்கையை எடுத்து வைத்ததுவோல,
இதுதனையும் - இதனையும், இறைவன் எடுத்து சடை ஏறக்கொடுத்தல் அலது
- இறைவன் எடுத்துத்தன் சடையின் கண் ஏறுமாறு கொடுத்தால் அல்லாமல்,
இதன் கொடுங்கோபம் அடங்காது என்பார் - இதன் கொடியசினம்
அடங்காது என்று கூறுவர்.

     இதடங்காது, விகாரம். கோபமது, அது பகுதிப் பொருள் விகுதி. (64)

வானாறிழி நதியாயிர முகத்தால்வரு வதுபோல்
ஆனாதெழு நீத்தந்தணி யாவாறுகண் டன்பு
தானாகிய சிவனன்பரை யொறுக்குந்தறு கண்ணர்
போனார்தம தகத்தேயுள பொருள்பேணுதல் கருதா.