பக்கம் எண் :

பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 331



     (இ - ள்.) வான் ஆறு இழி நரி - வானின் வழியே இழியும்
கங்கையாறு, ஆயிரமுகத்தால் வருவதுபோல் - ஆயிர முகத்தோடு
வருவதைப்போலஇ ஆனாது எழு நீத்தம் - இடையறாது பெருகும்
நீர்ப்பெருஙககு, தணியாவாறு - குறையாத தன்மையை, அன்புதான் ஆகிய
சிவன் அன்பரை ஒறுக்கும் தறுகண்ணர் கண்டு - அன்பே வடிவாகிய
சிவனடியாராகிய வாதவூரரை ஒறுக்கும் வன்கணாளர்கள் பார்த்து, தமது
அகத்தே உள பொருள் பேணுதல் கருதா போனார் - தங்கள் இல்லின்கண்
உள்ள பொருளைப் பாதுகாத்தல் கருதிச் சென்றனர்.

     அன்பு தானாகிய அன்பரை என்க. (65)

         [அறுசீரடியாசிரிய விருத்தம்]
வழுதிதன் றமர்விட் டேக மதுரைநா யகன்பாலேகி
அழுதிசை பாடுந் தொண்டி லகப்படும் பாதம் போற்றி
தொழுதுகொண் டறிவா யூறுஞ் சுகப்பெருங் கடலின் மூழ்கி
எழுதுசித் திரம்போன் மன்னி யிருந்தனர் வாதவூர்.

     (இ - ள்.) வாதவூரர் - வாதவூரடிகள், வழுதி தன்தமர் விட்டு ஏக -
பாண்டியன் தண்டலாளர் தம்மை விட்டுப்போக, மதுரை நாயகன்பால் ஏகி -
மதுரை நாயகனாகிய சோமசுந்தரக்கடவுளிடத்துச்சென்று, அழுது இசைபாடும்
தொண்டில் அகப்படும்பாதம் போற்றி - அன்பால் அழுது இசைத்தமிழால்
வழுத்துதலாகிய திருத்தொண்டின்கண் அகப்படுகின்ற திருவடியைத் துதித்து,
தொழுதுகொண்டு - வணங்கி, அறிவாய் ஊறும் சுகப்பெருங் கடலில் மூழ்கி -
அறிவுமயமாய்ச் சுரக்கும் இன்பக்கடலுள் மூழ்கி, எழுது சித்திரம்போல் மன்னி
இருந்தனர் - எழுதி வைத்த சித்திரத்தைப்போல் அசைவற்று இருந்தருளினர்.

     பத்திவலையில் அகப்படும் பாதம் என்றபடி. அறிவாய் மூழ்கி என
இயைத்தலுமாம். (66)

                       ஆகச் செய்யுள் - 2991