எழுப்புவார் பறை இரட்டுவார்
- எட்டுத் திக்குகளுக்கும் எட்டுமாறு
வாயினால் ஒலிசெய்து பறையடிப்பார்கள்.
நெஞ்சது,
அது பகுதிப்பொருள் விகுதி. ஆறுகென்று, அகரந் தொக்கது.
எட்ட - அணைய. (6)
[அறுசீரடியசிரிய
விருத்தம்] |
இந்நிலை
யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர்
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் அந்நிலை நகரின் றென்கீழ்த்
திசையுளா ளளவி லாண்டு
மன்னிய நரைமூ தாட்டி யொருத்தபேர் வந்தி யென்பாள். |
(இ
- ள்.) இந்நிலை - இங்ஙனமாக, ஊரில் உள்ளார் யாவர்க்கும் -
ஊரிலுள்ள அனைவருக்கும், கூலியாளர் துன்னி முன் அளந்த எல்லை -
கூலியாட்கள் வந்து செறிந்து முன்னரே அவரவர்க்கு அளந்து விட்ட;
எல்லையின்கண் நின்று, முறை தொழில் மூண்டு செய்வார் - முறைப்படி
தொழிலை மேற்கொண்டு செய்வா ராயினர்; அந்நிலை - அப்போது,
நகரின்தென்கீழ்த்திசையுளாள் - அந்த நகரத்தின் தென் கிழக்குத்
திசையிலுள்ளவளும், அளவு இல் ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி -
அளவில்லாத ஆண்டுகள் பொருந்திய நரைத்த முதுமையளுமாகிய ஒருத்தி,
பேர் வந்தி என்பாள் - வந்தி என்னும் பெயருடையவள்.
அளவில்
ஆண்டு மன்னிய - அளவற்ற யாண்டுகள் கழிந்த. மூதாட்டி
- முதுமையை ஆள்பவள். (7)
செவியுண
வான வேத சிரப்பொரு ளுணர்ந்து செந்தீ
அவியுண வூட்டு மீச னன்பரி னாற்ற நோற்ற
தவநிறை பேறு துய்ப்பா டாயிலார்க் கன்னை யொப்பாள்
சுவையுறு பிட்டு விற்றுண் டொழிலினா டமிய ளாவாள். |
(இ
- ள்.) செவி உணவு ஆனவேத சிரப்பொருள் உணர்ந்து -
செவியுணவாகிய மறை முடியின் பொருளினை உணர்ந்து, செந்தீ அவியுணவு
ஊட்டும் ஈசன் அன்பரின் - சிவந்த வேள்வித் தீயின்கண் அவியாகிய
உணவினை உண்பிக்கும் இறைவனடியார்களினும், ஆற்ற நோற்ற தவம் -
மிகச் செய்த தவத்தினது, நிறை பேறு துய்ப்பாள் - நிறைந்த பயனை
நுகருவாள்; தாய் இலார்க்கு அன்னை ஒப்பாள் - அன்னையில்லாதவர்கட்கு
அன்னை போல்வாள்; சுவை உறு பிட்டு விற்று உண்தொழிலினாள் - சுவை
மிக்க பிட்டினை விற்று உண்ணுந் தொழிலினையுடையாள்; தமியளாவாள்
-யாருமற்ற தனியள்.
இறைவற்கு
அன்பினாற் பிட்டருத்தி ஏனோர் பெறுதற்கரிய பேறு
பெறுவாளாகலின் அவயுணவூட்டு மீசனன்பரின் ஆற்றநோற்ற தவநிறை
பேறுதுய்ப்பாள் என்றார். தாயிலார்க்கு அன்னை யொப்பாள் என்றது
தாயில்லாத சிவபெருமானுக்கும் ஓர் அன்னைபோல்வாள் என்பதோர்
|