பக்கம் எண் :

336திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மனித்த னாகிய பூமியன் மகளென வீங்குத்
தனித்த காரணம் யாதெனத் தமனியப் பொதுவிற்*
குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருள்கூர்ந்
தினித்த தோர்கதை கேண்மினென் றெடுத்துரை செய்வான்.

     (இ - ள்.) மனித்தன் ஆகிய பூமியன் மகள் என - மானிடனாகிய
பாண்டியனுக்குத் திருமகளாராக, ஈங்கு தனித்த காரணம் யாது என -
இந்நிலவுலகில் இறைவனினின்றும் தனித்து வந்த காரணம் யாது என்று
வினவ, தமனியப் பொதுவில் - பொன்னம்பலத்தில், குனித்த சேவடிக்கு -
ஆடுகின்ற சிவந்த திருவடிக்கண், அன்பு உடை - அன்புடைய, குடமுனி -
கும்ப முனிவனாகிய அகத்தியன், அருள் கூர்ந்து - கருணை மிகுந்து,
இனித்தது ஓர் கதை கேண்மின் என்று - இனிமை யுடையதாகிய ஒரு கதை
உண்டு (அதனைக்) கேளுங்க்ள் என்று, எடுத்து உரை செய்வான் - எடுத்துக்
கூறுவான் எ - று.

     தக்கனும் வெற்பனும் தேவரினத்தைச் சார்ந்தவரென்பார் ‘மனித்தனாகிய
பூழியன்’ என்றார். தேவராயுள்ளாரும் பன்னாள் வருந்தி நோற்றமையால்
அவர்க்குப் புதல்வியாகிய இறைவி, அங்ஙன மின்றியே ஒருமனிதனுக்குப்
புதல்வியாய காரணம் என்னை யென்று வினவ வென்க. மனித்தன் : விரித்தல்
விகாரம். அடிக்கு - அடிக்கண். குனித்த சேவடி - ஆடிய திருவடி;
சிவபெருமான் திருவடி. (64)

விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த
நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
அச்சு வாகத மொழியினா ளம்பிகைக் கன்பு
வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா.

     (இ - ள்.) விச்சுவாவசு எனும் ஒரு விச்சையன் பயந்த - விச்சு வாவசு
என்ற பெயரினையுடைய ஒரு விஞ்சையன் பெற்ற, நச்சு வாள் விழ மடந்தை
- நஞ்சு பூசிய வாளை ஒத்த விழிகளையுடைய பெண் ஒருத்தியிருந்தனள்;
நாமம் விச்சாவதி - அவள் பெயர் விச்சாவதி, அச்சுவாகத மொழியினாள் -
அநத்க் கிளிபோலும் மொழியினையுடையாள், அம்பிகைக்கு அன்பு வைச்சு
வாழ்வு உறு மனத்தினாள் - உமையவள் பால் அன்பு வைத்து வாழுகின்ற
மனத்தையுடையவளாய், தாதையை வணங்கா - தன் தந்தையை வணங்கி
எ - று.

     விச்சையன் - விஞ்சையன்; வித்தியாதரன்; கந்தருவன் என்றுமாம்.
நச்சு - நஞ்சு; வலித்தல் விகாரம். இருந்தாள் என ஒரு சொல் வருவிக்க.
அச்சுவாகதம் - அழகிய கிளி யென்றுமாம். நெடுநல் வாடையுள் ‘அவ்விதழ்’
என்பதற்கு ‘அழகிய இதழ்’ என நச்சினார்க்கினியர் பொருள் கூறுதலுங்
காண்க. கு : உருபு மயக்கம். வைச்சு : மரூஉ; போலியு மென்ப. (65)

ஐய வம்பிகை தன்னையா னன்பினால் வழிபட்
டுய்ய வேண்டுமென் றாளவ னுலகெலாம் பயந்த
தையன் மந்திரந் தனைமக டனக்குப தேசஞ்
செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும்.

     (பா - ம்.) * தபனியப் பொதுவில்.