பொருளுந் தோன்ற
நின்றது; மேல் தந்தையொடு தாயின்றித் தனிக்கூலி
யாளாக, வந்தவெனக் கொருதாயாய் என இறைவன் கூறுமாறுங் காண்க. (8)
வைகலு மவித்த
செவ்விப் பிட்டினை மருங்கு நான்கு
கைகளாய் முளைத்த முக்கட் கரும்பினை யரும்பு மூரற்
செய்கதிர் முகத்தா னந்தத் தேறலை யால வாயெம்
ஐயனை யகத்தா னோக்கி யன்பினா லருத்தி விற்பாள். |
(இ
- ள்.) வைகலும் - நாள்தோறும், அவித்த செவ்விப்பிட்டினை -
அவித்த பக்குவ மமைந்த பிட்டினை, மருங்கு நான்கு கைகளாய் முளைத்த
முக்கண் கரும்பினை - பக்கத்தில் நான்கு கைகளாக முளைத்த மூன்று
கண்களை யுடைய கரும்பினை, அரும்பு மூரல் செய் - அரும்பிய
புன்னகையினைச் செய்யும், கதிர் முகத்து ஆனந்தத் தேறலை -
விளக்கமாகிய திருமுகத்தினை யுடைய இன்பத்தேனை, ஆலவாய் எம்ஐயனை
- திருவாலவாயில் எழுந்தருளிய எமது சோமசுந்தரக் கடவுளை, அகத்தால்
நோக்கி அன்பினால் அருத்திவிற்பாள் - உள்ளக் கண்ணால் நோக்கி
அன்பினால் முன் ஊட்டிப் பின்விற்பாள்.
கண்
- விழி, கணு. மூரலையுடைய கதிர் செய்யும் முகம் என்றுமாம்.
கரும்பும் தேனுமாகிய ஐயனை, நோக்கி, நோக்க னோக்கம். (9)
வளைந்தமெய்
யுடைய வந்த மாதவ நரைமூதாட்டிக்*
களந்தபங் கடைப்பான் கூலி யாள்கிடை யாம லாற்றத்
தளர்ந்தினி யென்னே மன்னன் றண்டிக்கி னென்செய் கேனென்
றுளந்தடு மாறிக் கூட லுடையநா யகனை யுன்னா. |
(இ
- ள்.) வளைந்த மெய்யுடைய அந்த மாதவ நரைமூதாட்டிக்கு -
கூனிய உடலையுடைய அந்தப் பெரிய தவத்தையுடைய நரைத்த முதியாள்
தனக்கு, அளந்த பங்கு அடைப்பான் - அளந்துவிட்ட பங்கினை
அடைப்பதற்கு, கூலியாள் கிடையாமல் - கூலியாள் கிடைக்காமல்,
ஆற்றத்தளர்ந்து - மிகவும் தளர்ந்து, இனி என்னே மன்னன் தண்டிக்கின்
என்செய்கேன் என்று - இனி என்னே வேந்தன் ஒறுத்தானாயின் யான் யாது
செய்வேனென்று, உளம் தடுமாறி - மனந்தடுமாறி, கூடல் உடைய நாயகனை
உன்னா - மதுரை நாயகனை நினைத்து. மூதாட்டி தனக்கு
என
விரித்துக் கொள்க. அடைப்பான், வினையெச்சம். கூடல் நாயகன் தன்னை
அடிமையாகவுடைய நாயகன் என்க. (10)
பிட்டுவிற்
றுண்டு வாழும் பேதையே னிடும்பை யென்ப
தெட்டுணை யேனு மின்றி யிரவியெங் கெழுகென் றிந்நாண்
மட்டுநின் னருளா லிங்கு வைகினேற் கின்று வந்து
விட்டதோ ரிடையூ றைய மீனவ னாணை யாலே. |
(பா
- ம்.) * மூதாட்டி.
|