(இ
- ள்.) ஐய - தந்தையே, யான் அம்பிகை தன்னை அன்பினால்
வழிபட்டு - யான் உமையம்மையை அன்பினாலே வழிபாடு செய்து,
உய்யவேண்டும் என்றாள் - பிழைக்க வேண்டுமென்று கூறினாள்; அவன்
அவ்விச்சுவாவசு, உலகு எலாம் பயந்த தையல் மந்திரம் தனை - உலக
மனைத்தையும் பெற்ற உமாதேவியின் திருமந்திரத்தை, மகள் தனக்கு
உபதேசம் செய்ய - மகளுக்கு உபதேசிக்க, அந்நெறி ஒழுகுவாள் -
அவ்வுபதேசவழி நடக்கின்ற அவள், பின்னும் செப்புவாள் - மேலும்
தன்தந்தையை நோக்கிக் கூறுகின்றாள் எ - று.
ஒழுகுவாள்,
பெயர். (66)
இறைவி தன்னையா தரிப்பதற் கிம்பிரிற் சிறந்த
குறைவி னன்னகர் யாதெனக் கூறுவான் கேள்வித்
துறைவி ளங்கினோர் பயில்வது துவாதச முடிவென்
றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால். |
(இ
- ள்.) இறைவி தன்னை ஆதரிப்பதற்கு - அவ்வுமையவளை
அன்பினால் வழிபடுதற்கு, இம்பரில் சிறந்த குறைவு இல் நல் நகர் யாது என
- இவ்வுலகில் மேலான குறைவில்லாத நல்ல பதியாதென்று வினவ, கூறுவான்
- விச்சுவாவசு சொல்வான்; துவாதச முடிவு என்று அறை வளம்பதி - துவாத
சாந்தம் என்று கூறப்படும் வளப்பத்தையுடைய பதியானது, கேள்வித்துறை
விளங்கினோர் பயில்வது - கற்றல் கேட்டல் வழிகளில் வல்லார் வதியப்
பெறுவதாய், அவனி மேல் சிவபுரம் ஆம் - பூவுலகில் சிவலோக மாகும்
எ - று.
செப்புவளாய்
யாதென என மேற்செய்யுளோடு கூட்டிப் பொருள்
கொள்க. சிறந்த நகர், குறைவில் நகர் எனத் தனித்தனி முடிக்க.
வேள்விகல்வியுமாம். பயில்வதாகிய வளம்பதி சிவபுரமாம் என்னலுமாம்.
ஆம் - ஆகும். ஆல் : அசை. (67)
சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சத்தி
பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம்
மாட மோங்கிய மதுரையா மற்றது போகம்
வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பதென் றெண்ணா. |
(இ
- ள்.) சேடு தாங்கு மூவுலகினுள் - பெருமையைத் தாங்கிய மூன்று
உலகங்களிலும், சிறந்தன சத்திபீடம் மூவிருபத்து நான்கு - மேம்
பட்டனவாகிய சத்திபீடங்கள் அறுபத்து நான்காகும்; அவற்றின் முற்பீடம் -
அவற்றுள் முதற்பீடமாயுள்ளது, மாடம் ஓங்கிய மதுஐரயாம் - மாளிகைகள்
உயர்ந்த மதுரைப் பதியாகும்; அது - அப்பதி, போகம் வீடும் வேண்டிய
சித்தியும் விளைப்பது என்று எண்ணா - போகத்தையும் வீடுபேற்றையும்
வேண்டுவார் வேண்டிய சித்திகளையும் அளிக்க வல்லது என்று கருதி எ-று.
பெருமையைத்
தாங்கிய. சிறந்தன : வினை முற்று பெயரெச்சப்
பொருளில் வந்தது. மூவிருபதோடு கூடிய நான்கு என்க. மற்று அசை.
போகமும் என உம்மை விரிக்க. போகம் - இம்மை யின்பம்.
|