பக்கம் எண் :

மண் சுமந்த படலம்337



     (இ - ள்.) ஐய - ஐயனே, பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன்
- பிட்டினை விற்று அதனால் வரும் ஊதியங்கொண்டு உண்டு உயிர் வாழும்
பேதையேனாகி யான், இந்நாள் மட்டும் - இந்நாள் வரையிலும், நின்அருளால்
இடும்பை என்பது எள் துணையேனும் இன்றி - நினது திருவருளால் துன்பம்
என்பது எள்ளளவேனு மில்லாமல், இரவி எங்கு எழுக என்று இங்கு
வைகினேற்கு - சூரியன் எங்கேனும் எழக்கடவன் என்று கருதி இங்கு இருந்த
எனக்கு, மீனவன் ஆணையால் இன்று வந்து விட்டது ஓர் இடையூறு -
பாண்டியன் ஆணையினால் இன்று ஒரு இடையூறு வந்து விட்டது.

     எங்கேனும் என்பது எங்கு எனத் தொக்குநின்றது. எழுக என்பதன்
அகரந்தொக்கது. எங்கு எழுந்தால் எனக்கு வருவதென்னை என்பது கருத்து;

"எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்"

என்னும் திருவாசகமும காண்க. வந்து விட்டது, விடு துணிவுப்பொருட்டு. (11)

துணையின்றி மக்க ளின்றித் தமரின்றிச் சுற்ற மாகும்
பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக் கோடாம்
புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவி யேற்கின்
றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ வெந்தாய்.

     (இ - ள்.) துணை இன்றி மக்கள் இன்றி - நாயகனுமில்லாமல்
மக்களுமில்லாமல், தமர் இன்றி - கிளைஞருமில்லாமல், சுற்றமாகும்
பணைஇன்றி - நட்பினராய கூட்டமுமில்லாமல், என்று கொள்வார் பிறர்இன்றி
- என்று கொள்ளும் பிறரு மில்லாமல், பற்றுக்கோடாம் புணை இன்றி
துன்பத்து ஆழ்ந்து புலம்புறு பாவி யேற்கு - (இவ்வாற்றால்) பற்றுக்
கோடாகிய புணையின்றித் துன்பமாகிய கடலுள் அழுந்திப் புலம்பும்
பாவியாகிய எனக்கு, இன்று - இப்பொழுது, இந்தத் துன்பம் இணை இன்றி
எய்துவது - இந்தத் துன்பம் ஒப்பின்றி வருவது, எந்தாய் - எமது தந்தையே,
அறனோ - அறமாகுமோ.

     துணை - கணவன். பணை - கூட்டம். இணையின்றி -
இணையில்லையாக. (12)

தேவர்க்கு மரிய னாகுந் தேவனே யன்ப ராவார்
யாவர்க்கு மெளிய னாகு மீசனே வேந்த னாணைக்
காவற்செங் கோலார் சீற்றங் கடுகுமுன் கூலி யாளாய்
ஏவற்செய் வாரைக் காணே னேழையே னினியென் செய்கேன்.

     (இ - ள்.) தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே - தேவர்கட்கும்
அரியனாகிய தேவனே, அன்பராவார்யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே -
அன்பராவார் அனைவருக்கும் எளியனாகிய இறைவனே, வேந்தன் ஆணைக்
காவல் செங்கோலார் சீற்றம் கடுகு முன் - மன்னனது ஆணையை
மேற்கொண்டு காக்கும் செங்கோலை யுடைய அமைச்சர்களின் சினம்
என்பால் விரைந்து வருமுன், கூலியாளாய் ஏவல் செய்வாரைக் காணேன் -