பக்கம் எண் :

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்339



     (இ - ள்.) சுவர்க்கச் செல்வர் - துறக்க வாழ்க்கையாகிய தேவர்கள்,
அல்லும் எல்லும் - இரவும் பகலும், வான் நகர்க் கதவு அடைப்பு இன்றி -
அந்நகரின் கதவு அடைபடுதலில்லாமல், அங்கு அடைந்து மதுயையை
யெய்தி, உமை அருள் சித்தியால் - அங்கயற்கண்ணம்மை அருளுகின்ற
சித்தியினால், வினையை வெல்லுவார் - வினைப்பகையை வெல்லுவார்கள்;
அதான்று - அதுவேயன்றி, எந்தையோடு நமர்கள் ஐவர்கள் வேண்டி - என்
தந்தையுடன் நம்மவர்கள் ஐவர் அஙவவுமையை வணங்கி. அந்நகரில் பல
நல்வரம்
அடைந்தனர் - அந்நகரத்தின்கண் பல நல்ல வரங்களைப் பெற்றனர்
எ - று.

     இடையறாது சென்று மீளுதலின் கதவு அடைப்பின்றி யென்றார். இன்றி
- இல்லையாக. அதான்று - அது அன்று; மரூஉ; குறிப்பு வினையெச்சம்.
கள் : விகுதிமேல் விகுதி. (69)

எம்மை யாரையும் யாவையு மீன்றவங் கயற்கண்
அம்மை யாவரே யாயினு மன்பினா தரிப்போர்
இம்மை யாகிய போகம்வீ டெண்ணியாங் கெய்தச்
செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும்.

     (இ - ள்.) எம்மை யாரையும் யாவையும் ஈன்ற அங்கயற்கண் அம்மை
- எம்மையும் மற்றுள்ள யாவரையும் யாவற்றையும் பெற்ற
அங்கயற்கண்ணமையார், அன்பின் ஆதரிப்போர் - அன்பினால் வழி
படுவார், யாவரே ஆயினும் - எவராயினும். எண்ணியாங்கு - (அவர்கள்)
எண்ணிய வண்ணமே, இம்மையாகிய போகம் வீடு - இம்மைப் பயனாகிய
போகத்தையும் வீடுபேற்றையும். எய்த - அடையுமாறு, செம்மையாகிய இன்
அருள் செய்து வீற்றிருக்கும் - கோட்டமில்லாத இனிய கருணையைப் புரிந்து
வீற்றிருப்பார் எ - று.

     எம்மையும் என உம்மை விரிக்க; தம்மை வேறுவிரித் தோதியது
அன்பின் உரிமையால்; என் அம்மை எனலுமாம். உயர்திணையும்
அஃறிணையு மென்பார் ‘யாரையும் யாவையும்’ என்றார். ஆதரித்தல் - ஈண்டு
வழிபடுதல். இம்மைப்பயனை, இம்மை யென்றார். செம்மை - சிறப்புமாம். (70)

என்ற தாதையை யிறைஞ்சினா ளனுச்சை*கொண் டெழுந்தாள்
மன்றன் மாமலர் வல்லிவோல் வழிக்கொடு கானங்
குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின்
நின்ற வாரியெம் பரையரு ணிறைந்தவந் நகரில்.

     (இ - ள்.) என்ற தாதையை இறைஞ்சினாள் - என்று கூறிய தந்தையை
வணங்கி, அனுச்சை கொண்டு எழுந்தாள் - விடைபெற்று எழுந்து, மன்றல்
மாமலர் வல்லிபோல் வழிக்கொடு - மணமும் பெருமையு முடைய
பூங்கொடிபோல் நடந்து, கானம் குன்றம் ஆறு பின் கிடப்ப - காடும்
மலையும் ஆறும் பிற்பட, அன்பில் நின்ற ஆதி எம்பரை அருள் நிறைந்த
அந்நகரில் முன் குறுகினாள் - அடியார்கள் அன்பில் நிலை பெற்றுத் தங்கிய
முதலவியாகிய எம் பராசத்தியாரின் திருவருள் நிறைந்த அம் மதுரைப்
பதியிற் சேர்ந்தாள் எ - று.


     (பா - ம்.) * அநுஞை.