ஆலுமறைச் சிரமுடியா ரடிக்கமல நிலஞ்சூடக்
கூலிகொடுத் தென்வேலை* கொள்வாருண் டோவென்றென்
றோலமறைத் திருமொழிபோ லுரைபரப்பிக் கலுழ்கண்ணீர்
வேலையிடைப் படிந்தயர்வாள் வீதியிடத் தணைகின்றார். |
(இ
- ள்.) ஆலும் மறைச் சிரம் முடி ஆர் அடிக்கமலம் - ஒலிக்கின்ற
வேத முடியின் உச்சியிலுள்ள திருவடித் தாமரையை, நிலம் சூட - நிலமகள்
தரிக்கு மாறு, கூலிகொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ என்று
என்று - கூலியைக் கொடுத்து என் வேலையை வாங்கிக் கொள்பவருண்டோ
வென்று, ஓலமறைத் திருமொழிபோல் உரைபரப்பி - ஒலிவடிவாகிய சிறந்த
வேத மொழி போலக் கூறி, கலுழ் கண்ணீர் வேலையிடப்படிந்து அயர்வாள்
- அழுகின்ற கண்ணீராகிய கடலிற் படிந்து துன்புறுவாளாகிய வந்தியினது,
வீதி யிடத்து அணைகின்றார் - வீதியின்கண் வருகின்றார்.
வேத
முடியின் மேலுள்ள திருவடி நிலந்தோயுமாறு நடந்து வருகின்றார்
என அருமையும் எளிமையும் தோன்றக் கூறியபடி. உரை பரப்பி அடிக்கமலம்
நிலஞ் சூட வீதியிடத்து அணைகின்றார் என வினை முடிக்க. எனை வேலை
கொள்வார் என்னும் பாடத்திற்கு என்னை வேலை வாங்குவார் என்று
உரைக்க. (18)
தந்தைதாய் பிறரின்றி வருகின்ற தனிக்கூலி
மைந்தனார் வாய்மலருங் குரல்கேட்டு வந்தியுந்தன்
சிந்தையா குலமிழந்து நல்கூர்ந்தார் செல்வமகத்+
தந்தபோ தெழுமகிழ்ச்சி தலைக்கொள்ளப் புறம்போந்தாள். |
(இ
- ள்.) தந்தை தாய் பிறர் இன்றி வருகின்ற - தந்தையும் தாயும்
வேறொருவரின்றி வருகின்ற, தனிக் கூலி மைந்தனார் வாய் மலரும் குரல்
கேட்டு - தனித்த கூலி மகனார் கூறிவரும் குலரைக் கேட்டு, வந்தியும் தன்
சிந்தை ஆகுலம் இழந்து - வந்தியும்தனது மனக்கவலை யொழிந்து, நல்
கூர்ந்தார் செல்வம் மக தந்த போது - மக்கட் பேறின்மையாகிய வறுமையை
யுடையார் மக்கட் பேறாகிய செல்வத்தைப் பெற்ற காலத்து, எழுமகிழ்ச்சி
தலைக்கொள்ளப் புறம் போந்தாள் - அவர்க்குண்டாம் மகிழ்ச்சி தனக்கு
வந்து கூட வெளியே வந்தாள்.
தாம்
எல்லார்க்கும் தந்தையும் தாயும் ஆவதன்றித் தமக்கு
வேறொருவர் தந்தை தாயாகப் பெறாத என்க. நல்கூர்ந்தார் - பிள்ளையால்
மிடிப்பட்டார்;
"நல்கூர்ந்தார் செல்வ மகள்" |
என்னும் கலித்தொகை
யடிக்கு நச்சினார்க்கினியர் இவ்வாறு பொருள்
கூறுதல் காண்க. வந்தியும் மகப்பெற்றாற் போலும் மகிழ்ச்சி யெய்தினாள்;
வந்தி என்பதற்கு மலடி யென்பதோர் பொருளு முண்மையின் இது மிக்க
நயமுடைத்து. (19)
(பா
- ம்.) * எனை வேலை. +செல்வமிக. செல்வமகம்
|