பக்கம் எண் :

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்341



சாந்திராயணம் நுகர்ந்தும் - (ஆனித் திங்களில்) சாந்திராயண நோன்பின்
உணவு உண்டும், ஆன் ஐந்து நுகர்ந்தும் - (ஆடித் திங்களில்) பஞ்ச
கவ்வியமாகிய உணவு உண்டும், பால் நுகர்ந்தும் - (ஆவணித் திங்களில்)
பாலை அருந்தியும், நறிய நீர் நுகர்ந்தும் - (புரட்டாசித் திங்களில்) நல்ல
நீரைப்பருகியும், தருப்பை இரும் புதல் நுனி நீர் நுகர்ந்தும் - (ஐப்பசித்
திங்களில்) தருப்பை யாகிய பெரிய புல்லின் நுனியிலுள்ள நீரைப் பருகியும்,
கால் நுகர்ந்தும் - (கார்த்திகைத் திங்களில்) வாயுவை உண்டும், இயற்றரும்
பட்டினி உற்றும் - (மார்கழித் திங்களில்) செய்தற்கரிய பட்டினியாயிருந்தும்,
இவை வரம்பு உற - இவைகளை வரம்பு பட, இராறு திங்களும் நோற்று -
பன்னிரு மதியும் செய்து, வாடி - (உடல்) மெலிந்து, மேல் வருஞ் சுறாமதியில்
- மேலே வருகின்ற தைத்திங்களில் எ - று.

     நல்லூண் முதலியவற்றிற்கு ஐயுருபு விரித்து நுகர்ந்து என்பதனைத்
தனித்தனி கூட்டுக. தைத் திங்கள் முதல் பன்னிரு திங்கட்கும் நல்லூண்
முதலியவற்றில் ஒரோவொன்று முறையானே இயையும். உதவப்பெற்ற வூண்
நுகர்தல் - பகல் இரவு என்னு நியதியின்றிப் பிற ரளிக்கக் கிடைத்த
வுணவினைக் கிடைத்தபொழுதுண்டல். சாந்திராயணம் - மதியின் கலை
வளருந்தோறும் ஒவ்வொரு கவளம் உயர்த்தும், குறையுந்தோறும் ஒவ்வொரு
கவளம் குறைத்தும் உண்டு நோற்கும் விரதம முன்னும் உரைக்கப்பட்டது.
ஈராறு எனற் பாலது குறு கிற்று : விகாரம். (73)

சந்நிதி யடைந்து தாழ்ந்துநின் றிளமாந்
     தளிரடிக் காஞ்சி சூழ் கிடந்த
மின்னிகர் மருங்கு லிடையிடை நுழையா
     வெம்முலைச் செம்மலர்க் காந்தட்
பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற்
     பூரண மதிக்கலை முகத்தின்
இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை
     யிறைவியை யிம்முறை நினையா.

     (இ - ள்.) சந்நிதி அடைந்து தாழ்ந்து நின்று - திருமுன் சென்று
பணிந்து நின்று, மா இளம் தளிர் அடி - மாவின் இளமையாகிய தளிர்
போன்ற திருவடிகளையும். காஞ்சி சூழ் கிடந்த மின் நிகர் மருங்குல் -
காஞ்சி என்னும் அணி புறஞ்சூழந்து கிடந்த மின்னலை ஒத்த இடை
யினையும், இழை இடை நுழையா வெம்முலை - நூல் இடையிற்புகுதா வாறு
நெருங்கிய விருப்பத்தைத் தருகின்ற திருத்தனங்களையும், செம் பொன் வளை
நிரை காந்தள் மலர்க்கை - செம்பொன்னாலாகிய வளையல்களின்
வரிசைகளையுடைய காந்தள் மலர்போன்ற திருக்கரங்களையும், மங்கலக்
கழுத்தின் - மங்கல நாண் அணிந்த திருக்கழுத்தினையும், பூரணம் கலைமதி
முகத்தின் - நிறைந்த கலைகளையுடைய சந்திரன் போன்ற திருமுகத்தினையும், இன் இசை அளி சூழ் இருள் கற்றை குழல் - இனிய இசையையுடைய
வண்டுகள் சூழ்ந்த இருள் போன்ற திரளாகிய கூந்தரையுமுடைய, இறைவியை
- தேவியை, இம்முறை நினையா - இவ்வாறு பாதாதி கேசமாகத் தியானித்து
எ - று.