[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
ஒளியா லுலகீன்
றுயிரனைத்து மீன்போற் செவ்வி யுறநோக்கி
அளியால் வளர்க்கு மங்கயற்க ணன்னே கன்னி யன்னமே
அளியா லிமவான் றிருமகளா யாவியன்ன மயில் பூசை
தெளியா மழலைக் கிளிவளர்த்து விளையாட் டயருஞ் செயலென்னே.
|
(இ
- ள்.) ஒளியால் உலகு ஈன்று - தனது ஒளியினால்
உலகங்களனைத்தையும் பெற்று, உயிர் அனைத்தும் - எல்லாவுயிர்களையும்,
செவ்வி உற - பக்குவ முறும்படி, மீன்போல் நோக்கி - மீன்போலப் பார்த்து,
அளியால் வளர்க்கும் - கருணையுடன் வளர்க்கின்ற, அம் கயல் கண்
அன்னே - அழகிய கயல்போன்ற கண்களையுடைய தாயே, கன்னி அன்னமே
- கன்னிப் பருவத்தினையுடைய அன்னமே, அளியால் அமவான் திருமகளாய்
- நீ தான் கருணையால் மலையரையன் திருமகளாகி, ஆவி அன்னம் -
தடாகத்தின் கண் உள்ள அன்னங்களையும், மயில் பூவை - மயில்களையும்
நாகணவாய்ப் புட்களையும், தெளியா மழலைக் கிளி -பொருள் தெரியாத
மழலைச் சொற்களையுடைய கிளிகளையும், வளர்த்து விளையாட்டு அயரும்
செயல் என்னே - வளர்த்து விளையாடுகின்ற செய்கை யாது குறித்தோ
எ - று.
ஒளி
- ஞானம், அருளுமாம். மீனானது முட்டையிட்டு அவற்றை
நோக்குதலினாலே பக்குவமடையச் செய்தல்போல உயிர்களை யெல்லாம்
ஈன்று தன் அருணோக்கத்தால் அவற்றிற்குப் பக்குவ முண்டாக்கி வளர்க்குங்
காரணத்தால் அங்கயற் கண்ணி யென்பது பெயரென்றற்கு மீன்போற்
வெவ்வியுற நோக்கி வளர்க்கும் அங்கயற் கணன்னே என்று கூறிற்று. மீன்கள் நோக்குதலால்
அவற்றின் முட்டை குஞ்சாகு மென்ப. ஆவியன்னம் -
உயிர்போன்ற அன்னம் எனலுமாம்; அன்ன வெனப் பிரித்து, உயிர்போன்ற
மயில் முதலியன எனினும் அமையும். எல்லாவுயிர்களையும் வளர்க்கும்
அன்னையாகிய நீ அவற்றுட் சிலவற்றை வளர்ப்பதாகக் காட்டுவது நீ
கருணையாற் கொண்ட கோலத்திற் கேற்ற விளையாட்டன்றிப் பிறிதில்லை
என்பது கருத்து. (76)
அண்டக் குவைவெண் மணற்சிறுசோ
றாக்கித் தனியே விளையாடுங்
கொண்டற் கோதாய் படியெழுத
லாகா வுருவக் கோகிலமே
கொண்டற் குடுமி யிமயவரை
யருவி கொழிக்குங் குளிர்முத்தால்
வண்டற் குதலை மகளிரொடும்
விளையாட் டயரும் வனப்பென்னே. |
(இ
- ள்.) அண்டக்குவை - அண்டக் கூட்டங்களை, வெண்மணல்
சிறுசோறு ஆக்கி - வெள்ளிய மணலாற் சிறு சோறாக்குவதுபோல ஆக்கி,
தனியே விளையாடும் கொண்டல் கோதாய் - தனிமையாக விளையாடுகின்ற
முகில்போலும் கூந்தலையுடைய அன்னாய், படி எழுதலாகா உருவக்
கோகிலமே - ஒப்பு எழுதமுடியாத வடிவத்தினையுடைய குயிலே,
|