பக்கம் எண் :

344திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கொண்டல் குடுமி - முகில் தவழும் முடியினையுடைய, இமய வரை அருவி
கொழிக்கும் - இமயமலையின் அருவி ஒதுக்கிய, குளி்ர் முத்தால் - குளிர்ந்த
முத்துக்களால், வண்டல் குதலை மகளிரொடும் - குதலைச் சொல்லையுடைய
விளையாட்டுப் பெண்களோடும், விளையாட்டு அயரும் வனப்பு என்னே - நீ
தான் விளையாடுகின்ற அழகு யாது குறித்தோ எ - று.

     குவை - திரட்சி; கூட்டம். சிறு சோறாக்கி - சிறு சோறாக்குவது போற்
செய்து. பல்லாயிர கோடி அண்டங்களையும் படைப்பது இறைவிக்கு
விளையாட்டு மாத்திரையே என்று கூறிற்று. கோதாய் : கோதை யென்பதன்
விளி. படி - ஒப்பு;
 "படியெடுத் துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்"
என்றார் பிறரும்; அதுபோல் எழுதலாகாத உருவமென்க. வண்டல் - மகளிர்
விளையாட்டு. (77)

வேத முடிமே லானந்த வுருவாய் நிறைந்து விளையாடும்
மாத ரரசே முத்தநகை மானே யிமய மடமயிலே
மாத ரிமவான் றேவிமணி வடந்தோய் மார்புந் தடந்தோளும்
பாத மலர்சேப் புறமிதித்து விளையாட் டயரும் பரிசென்னே.

     (இ - ள்.) வேதமுடிமேல் ஆனந்த உருவாய் நிறைற்து - மறையின்
உச்சியில் இன்ப வடிவாக நிறைந்து, விளையாடும் மாதர் அரசே -
விளையாடுகின்ற பெண்ணரசே, முத்தநகை மானே - முத்துப்போரும்
பற்களையுடைய மானே, இமய மடமயிலே - இமயமலையிற் றோன்றிய
இளமையாகிய மயிலே, மாதர் இமவான் தேவி - அழகிய மலையரசன்
தேவியாகிய மேனையின், மணிவடம் தோய் மார்பும் - முத்துமாலை
பொருந்திய மார்பிலும், தடம் தோளும் - பருத்த தோள்களிலும், பாத மலர்
சேப்பு உற - அடிமலர்கள் சிவக்குமாறு, மிதித்து விளையாட்டு அயரும் பரிசு
என்னே - குதித்து விளையாடுகின்ற தன்மை யாது குறித்தோ எ - று.

     சேப்பு : செம்மை யென்னும் பண்படியாக வந்த தொழிற்பெயர். பரிசு
- தன்மை. விளையாட்டு அயரும் - விளையாடுதலைச் செய்யும் : விளையாடும்
என்பது விரிந்து நின்றது.

     இவை மூன்றும் முன்னிலைப் பரவல்; கந்தருவ மார்க்கத்தால் இடை
மடக்கி வந்தன. (78)

[எழுசீரடியாசிரியவிருத்தம்]
யாழியன் மொழியா* லிவ்வழி பாடி
     யேத்தினா ளாகமெய் யுள்ளத்
தாழிய வன்பின் வலைப்படு கருணை
     யங்கயற் கண்மடமானோர்

     (பா - ம்.) * மொழியாள்.