பக்கம் எண் :

வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்367



[கொச்சகக் கலிப்பா]
அன்னதனித் தொன்மதுரை யன்றுதொடுத் தின்றெல்லை
தன்னனைய தாயகில தலங்கள்சிகா மணியாகிப்
பொன்னகரின் வளஞ்சிறந்து பூவுலகிற் சிலலோகம்
என்னவிசை படப்பொலிந்த தேழிரண்டு புவனத்தும்.

     (இ - ள்.) அன்னதனி தொல் மதுரை - அந்த ஒப்பற்ற பழைய
மதுரைப்பதி, அன்று தொடுத்து இன்று எல்லை - அன்று முதல் இன்று
வரையும், தன் அனையதாய் - தனக்குத் தானே நிகரானதாய், அகில
தலங்கள் சிகாமணியாகி - எல்லாத் தலங்களுக்கும் ஒரு முடி மணியாய்,
பொன் நகரின் வளம் சிறந்து - தேவ உலகத்தினும் வளம் மிக்கு, ஏழ்
இரண்டு புவனத்தும் பூ உலகில் சிவலோகம் என்ன இசைபடப் பொலிந்தது -
பதினான்கு உலகங்களினும் பூலோக சிவலோகமென்று கூறப் புகழுடன்
விளங்கியது.

     வேறு ஒப்பாவ தில்லையென்பார் 'தன்னனையதாய்' என்றார். இதனால்
மதுரைக்குப் பூலோக சிவலோகம் என்னும் பெயருண்டானமை கூறப்பட்டது.
(68)      

                      ஆகச் செய்யுள் வரிசை 2030.