பக்கம் எண் :

மண் சுமந்த படலம்373



              [அறுசீரடியாசிரிய விருத்தம்]
என்றுபல முறையாலே துதித்தடைந்தோர்க் கன்பரிவ ரிவரைத் தேறின்
நன்றுமிக பரபோகம் வீடுபெற லெளிதென்று நகைத்தார் வேந்தன்
அன்றுதிருப் பணிபூசை பிறவுநனி வளம்பெருக்கி யழகார் வெள்ளி
மன்றுடையா னடிக்கன்பு முயிர்க்கன்புஞ் சுரந்தொழுகி வாழு நாளில்.

     (இ - ள்.) என்று பல முறையாலே துதித்து - என்று பல
முறையினாலே வழுத்தி, அடைந்தோர்க்கு அன்பர் இவர் - தன்னடியினை
அடைந்தவர்க்கு அன்பராவாரிவர்; இவரைத் தேறின் - இவரைத் தெளிந்தால்,
இகபர போகம் - இம்மை மறுமையின்பங்களையும், வீடு - முத்தியின்
பத்தையும், நன்றும் பெறல் எளிது என்று - பெரிதும் அடைதல் எளிதென்று
கருதி, நகைத்தார் வேந்தன் - ஒளி பொருந்திய மாலையை யணிந்த மன்னன்,
அன்று - அந்நாள் முதல், திருப்பணி பூசை பிறவும் - திருப்பணியும்
பூசனையும் பிறவும், நனிவளம் பெருக்கி - மிகவும் பொலிவுற நடத்தி, அழகு
ஆர் வெள்ளிமன்று உடையான் அடிக்கு அன்பும் - அழகு நிறைந்த வெள்ளி
யம்பலமுடைய இறைவனது திருவடிக்கண் அன்பும், உயிர்க்கு அன்பும் சுரந்து
ஒழுகி வாழும் நாளில் - உயிர்களிடத்து அன்பும் சுரந்து
வாழ்ந்தொழுகும்போது.

     பிறவும் என்றது திருவிழா முதலியவற்றை அடிக்கு உயிர்க்கு
என்பவற்றில் நான்கனுருபு ஏழன் பொருளில் வந்தன. உயிர்க்கன்பு என்புழி
அன்பு அருளுமாம். (88)

முன்புபெருந் துறையார்க்கு மடியார்க்கு
     மறந்தெரிந்த முறையா லீட்டுந்
தன்பொருள்போ யுடன்பலவாய்த் தழைத்துவரு
     பயனேபோற் றலையு வாவின்
நன்பனிகான் மதிகண்ட வுவரியெனப்
     பலசெல்வ நாளு மோங்க
இன்புறுவான் சகநாத னெனுமகப்பெற்
     றின்பத்து ளின்பத் தாழ்ந்தான்.

     (இ - ள்.) அறம் தெரிந்த முறையால் ஈட்டும் தன் பொருள் -
அறநெறியினை ஆராய்ந்தறிந்த முறையினால் ஈட்டிய தனது பொருள், முன்பு
பெருந்துறையார்க்கு அடியார்க்கும் போய் - முன்னம் பெருந்துறை
இறைவரிடத்தும் அவரடியாரிடத்தும் வாதவூரடிகளாற் சென்று, உடன் -
உடனே, பலவாய் தழைத்து வருபயனே போல் - பல வகையாய்த் தழைத்து
வரும் பயனேபோல, தலை உவாவின் நன்பனி கால் மதிகண்ட உவரிஎன
பூரணையில் நல்ல குளிர்ந்த நிலவினை வீசும் சந்திரனைக்கண்ட கடல்
பொங்குதல்போல, பல செல்வம் நாளும் ஓங்க - பல வகைப்பட்ட செல்வம்
நாள்தோறும் மிக்கோங்க, இன்புறுவான் - இன்பமுறும் அவ்வரி மருத்தன
பாண்டியன்; சகநாதன் எனும் மகப்பெற்று - சகநாதன் என்னும் புதல்வனைப்