பக்கம் எண் :

390திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) வாகுவலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன் - தோள்
வலியுடையானாகிய சகநாத பாண்டிய மன்னன் புதல்வன், வீரவாகு -
வீரவாகு என்பான்; அன் சேய் விக்கிரமவாகு - அவன் மகன் விக்கிரமவாகு
என்பான்; அவன் சேய்பராக்கிரமவாகு - அவன் புதல்வன் பராக்கிரமவாகு
என்பான்; அனையான் மகன் சுரபிமாறன் - அவன்சேய் சுரபிமாறனென்பான்;
அனையான் திருமைந்தன் - அவனது அழகிய புதல்வன், வாகுவலத்தால்
மறம் கடிந்து - தனது தோற் வலியினால் தீமையைப் போக்கி, மண் ஆளும்
குங்குமத் தென்னன் - நிலவுலகை ஆளுங் குங்கும பாண்டியனென்பான்.

     சகநாதவழுதி அரிமருத்தனன் மகனென்பது முற்படலத்தாற்
பெறப்பட்டது. (2)

அன்னான் குமரன் கருப்புரபாண் டியனா மவன்சேய் காருணிய
மன்னா மவன்றன் மகன்புருடோத் தமனா மவன்றன் மகனாகும்
மின்னார் மௌலிச்* சத்துருசா தனபாண் டியனாம் விறல்வேந்தன்
இன்னான் மகன்கூன் பாண்டியனா மிவன்றோள் வலியா லிசைமிக்கான்.

     (இ - ள்.) அன்னான் குமரன் கருப்புர பாண்டியனாம் - அவன் மகன்
கருப்பூர பாண்டியனாவான்; அவன் சேய்காருணிய மன்னாம் - அவன்
புதல்வன் காருணிய பாண்டியனாவான்; அவன் தன் மகன் புருடோத்தமனாம்
- அவன் மகன் புருடோத்தம பாண்டியனாகும்; அவன் தன் மகனாகும் -
அவன் மகனாவான், மின் ஆர் மௌலிச் சத்துரு சாதன பாண்டியனாம் -
ஒளி நிறைந்த முடியினையுடைய சத்துரு சாதன பாண்டியனாகிய, விறல்
வேந்தன் - வெற்றியையுடைய மன்னன்; இன்னான் மகன் கூன் பாண்டியனாம்
- இவன் புதல்வன் கூன்பாண்டிய னென்பான்; இவன் தோற் வலியால்
இசைமிக்கான் - இவன் தனது தோள் வலியினால் மிக்க
புகழுடையனாயினான்.

     தன் என்பன அசைகள். (3)

திண்டோள் வலியாற் குடநாடார் செம்ம றனையு மாரலங்கல்
வண்டோ லிடுதா ரிரவிகுர மருமான்றனையு மலைந்துபுறங்
கண்டோர் குடைக்கீழ் நிலமூன்றுங் காவல் புரிந்து கோலோச்சிப்
புண்டோய் குருதி மறக்கன்னிப் புகழ்வேல் வழுத நிகழ்நாளில்.

     (இ - ள்.) திண் தோள் வலியால் குடநாடர் செம்மல் தனையும் -
திண்ணிய தோளின் வலியால் மேற் புலத்தார் மன்னனாகிய சேரனையும்,
ஆர் அலங்கல் வண்டு ஒலிடுதார் இரவிகுல மருமான் தனையும் -
ஆத்திமாலையில் வண்டுகள் ஒலிக்கும் வரிசையை யுடைய
சூரியகுலத்தோன்றலாகிய சோழனையும், மலைந்து புறம் கண்டு - போர்
புரிந்து புறங்கண்டு, ஓர் குடைக்கீழ் நிலமூன்றும் காவல்புரிந்து - ஒரு குடை
நீழலில் இம்மூன்று நிலங்களையும் காத்து, கோல் ஓச்சி - செங்கோல்
நடாத்தி


     (பா - ம்.) * மின்னார் மோலி.