போக்கி, அருட்சித்தசாமி
திருவருள் நோக்கால் விளைபேரின்பம் -
அருளுருவாகிய சித்தமூர்த்திகளின் திருவருட் பார்வையால் விளைந்த
பேரின்பத்தின்கண், மன்றல் மது வீழ் வண்டில் - மணம் பொருந்திய
தேனின்கண் வீழ்ந்த வண்டினைப் போல, அபிடேகமாறன் கலந்திருந்தான்
- அபிடேக பாண்டியன் இரண்டறக் கலந்திருந்தான்.
தமிழிலே
ககரவொற்றின் பின் வேறுமெய் வந்து மயங்காதாகலின்
விக்கிரமன் என்றே வருதல் வேண்டும்; செய்யுளோசை மிகாமற் பொருட்டு
விக்ரமன் என நின்றது. சோமசுந்தரக் கடவுள் சித்தராக வெளிவந்து அருள்
புரிந்தமையால் சித்தசாமி திருவருனோக்கால் என்றார். மதுவில் வீழ்ந்த
வண்டு அதனையுண்டு பெயராது கிடத்தல்போல வென்க;
"அதுவென்றா
லெதுவெனவந் தடுக்குஞ் சங்கை
யாதலினா
லதுவெனலு மறவே விட்டு
மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி
மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தார்"
|
என்று தாயுமானவடிகள்
கூறுமாறுங் காண்க. மன்ற என்பது பாடமாயின்
தேற்றமாக என்றுரைக்க. மன்னும் ஓவும் அசைகள். (29)
ஆக செய்யுள் - 1385
|