அரச னலகிய வெறுக்கைபூ ணாடைகள் பிறவும்
பரசு நாவலர் மாணவர் யாவர்க்கும் பகிர்ந்து
வரிசை யாலிசைக் கிளையொடு மனையில்வந் தெய்திக்
கரைசெ யாமகழ் சிறந்திசைக் காவல னிருந்தான். |
(இ
- ள்.) அரசன் நல்கிய - வரகுண பாண்டியன் காடுத்த, வெறுக்கை
பூண் ஆடைகள் பிறவும் - செல்வமும் அணியும் ஆடைகளும் பிறவுமாகிய
அனைத்தையும், பரசும் நாவலர் மாணவா யாவர்க்கும் பகிர்ந்து - துதிக்கின்ற
நாவலர்க்கும் மாணவர்கட்கும் பகிர்ந்து கொடுத்து, இசைக்கிளையொடு -
பாண் சுற்றத்தோடு, வரிசையால் - அரசன் செய்த வரிசையோடும், மனையில்
வந்து எய்தி - மனையின்கண் வந்தடைந்து, கரை செயா மகிழ் சிறந்து -
அளவிறந்த மகிழ்ச்சியிற் சிறந்து, இசைக் காவலன் இருந்தான் - யாழ்
வேந்தனாகிய பாணபத்திரன் இனிதிருந்தான்.
ஆடைகளும்
பிறவும் என்க. பரசு நாவலர் - வந்தியர். வரிசை -
ஊர்தி கொடி முதலியன. (70)
ஆகச் செய்யுள் 2100
|