அரசன்
யாவற்றையும் கொடுக்கக் கொடுக்க அவையனைத்தையும்
கொள்ளாது மறுத்துத் தனக்கு அமையுமளவாகக் கொள்ள வென்க. தன்னம்
என்பது பாடமாயின் அரசன் கருத்துக்குச் சிறியவென்று தோன்றுமளவாக
என உரைக்க. தன்னம் - சிறுமை. தான், ஏ அசைகள்.
"பரந்த
நிதியின் பரப்பெல்லாம் பாண னார்பத் திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி மற்றிவையும்
உரந்தங் கியவெங் கரிபரிகண் முதலா வுயிருள் ளனதனமும்
புரநத் வரசுங் கொள்ளுமென மொழிந்தார் பொறையர் புரவலனார்" |
|
"பாண
னார்பத் திரனாருத் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த விவையெல்லாம் கண்டு மகிழ்வுற் றதிசயித்துப்
பேண வெனக்கு வேண்டுவன வடியேன் கொள்ளப் பிஞ்ஞகனார்
ஆணை யரசு மரசுறுப்புங் கைக்கொண் டருளு மெனவிறைஞ்ச" |
என்பன திருத்தொண்டர்
புராணச் செய்யுட்கள். (28)
பின்னே ழடியோ
சேட்சென்று பெருமை சான்ற வரிசையினாற்
றன்னே ரிசையான் றனைவிடுத்து மீண்டா னாகத் தமிழ்மதுரை
மின்னேர் சடையா ரிசைத்தொண்டன் றானு மீண்டு வெயில்விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுஐர நகர்புக்கான். |
(இ
- ள்.) பின் ஏழ்அடியோ - பின்னே ஏழு அடி தூரமோ
(சென்றது), சேண் சென்று - அதிக தூரஞ் சென்று, பெருமை சான்ற
வரிசையினால் - பெருமை நிறைந்த சிறப்புடன், தன்நேர் இசையான்
தனைவிடுத்து மீண்டானாக - தனக்குத்தானே ஒத்த இசைவல்ல
பாணபத்திரனை அனுப்பி மீண்டு வந்தனனாக; தமிழ மதுரை மின்நேர்
சடையார் - தமிழ் வளர்க்கும் மதுரைப்பதியில் எழுந்தருளிய மின்னலை
யொத்த சடையினையுடைய சோமசுந்தரக் கடவுளது, இசைத்தொண்டன்
தானும் மீண்டு - இசைபாடுந் தொண்டனாகிய பாணபத்திரனுந் திருப்பி,
வெயில்விரிக்கும், ஒளிவீசுகின்ற, பொன்ஏர் மௌலிநிதிக் கிழவன் போல -
பொன்னாலாகிய அழகிய முடியினையுடைய குபேரன்போல, மதுரைநகர்
புக்கான் - மதுரைப்பதியிற் புகுந்தனன்.
தம்மிடம்
வந்து செல்லும் பெரியார்கட்கு ஏழடிதூரம் பின் சென்று
வழியனுப்புதல் மரபு; சேரலனாரோ அங்ஙனமன்றி ஆரா அன்பினால்
நகர்ப்புறங்காறுஞ் சென்று அவர் விடுக்க மீண்டார் என்க.
"பண்பு
பெருகும் பெருமாளும் பாணனார்பத் திரனார்பின்
கண்கள் பொழிந்த காதனீர் வழியக் கையாற் றொழுதணைய
நண்பு சிறக்கு மவர்த்மை நகரின் புறத்து விடைகொண்டு
திண்பொற் புரிசைத் திருமதுரை புக்கார் திருந்து மிசைப்பாணர்" |
என்பது பெரியபுராணம்.
(29)
|