பக்கம் எண் :

பலகையிட்ட படலம்419



     (இ - ள்.) உடைய நாயகளை - தடமமை ஆளாகவுடைய சோம
சுந்தரக் கடவுளை முன்பு - முன்னமே, முப்போதும் புகுந்து இறைஞ்சி -
மூன்று காலங்களினும் சென்று வணங்கி, இன்புறும் ஏழ் இசைக்கிழவன் -
இன்பமிகும் பாணபத்திரன், இருநிதியம் அருளியபின் - பெருஞ்செல்வத்தை
அருளிய பின்னர், அன்பு சிறந்து - அன்புமிகுந்து, அரையிரவும் அடைந்து
பணிந்து - நடுயாமத்திலுஞ் சென்று வணங்கி, அடல்விடையின் பின்புறம்
நின்று - வெற்றி பொருந்திய திருநந்தி தேவரின் பின்புறத்தில் நின்று
கொண்டு, ஏழ் இசையும் பாடிவரும் பேறு அடைவான் - ஏழிசைகளையும்
பாடி வருதலாகிய பயனை அடைவான்.

     நிதியம் அளிப்பதற்குமுன் காலை நண்பகல் மாலை என்னும் முப்
பொழுதும் சென்றிறைஞ்சி வந்தவன் நிதியம் அளித்தபின் ஆரா அன்பினால்
அரையிரவிலும் சென்று பணிந்து பாடுவானாயினன் என்க. முன்புடைய என்று
கொண்டு எல்லாவல்லமையுமுடைய என்றும், முன்னமே தன்னை
ஆளாகவுடைய என்றும் உரைப்பாருமுளர். (2)

தொழுந்தகையன் பருந்தேவர் தொகுதிகளுந் தொழத்திங்கட்
கொழுந்தலைய நதியலையக் குனிக்கின்ற தனிக்கடவுள்
செழுந்தரளச் சிவிகையின்மேற் றேவிதிருப் பள்ளியறைக்
கெழுந்தருளும் போதுபணிந் தேத்துவா னோரிரவில்.

     (இ - ள்.) தொழும் தகை அன்பருந் - யாவரும் வணங்குந் தகுதி
யுடைய அடியார்களும், தேவர் தொகுதிகளும் - தேவர் குழாங்களும்,
தொழ - வணங்கவும், திங்கள் கொழுந்து அலைய - பிறைச் சந்திரன் ஒரு
பால் அலையவும், நதி அலைய - கங்கை ஒருபால் அலையவும், குனிக்கின்ற
- வெள்ளிமன்றுள் ஆடியருளும், தனிக்கடவுள் - ஒப்பற்ற இறைவன்,
செழுந்தரளச் சிவிகையின்மேல் - செழிய முத்துவிமானத்தின்மேல், தேவி
திருப்பள்ளியறைக்கு - உமையம்மையாரின் திருப்பள்ளியறைக்கு,
எழுந்தருளும்போது - எழுந்தருளும் நடுயாமத்தில், பணிந்து ஏத்து வான் -
வணங்கி இசைபாடுவானாயினன்; ஓர் இரவில் - ஒருநாள் இரவில்.

     ஏத்துவான் அங்ஙனம் ஏத்துநாள் ஓர் இரவில் என்க. (3)

இன்னிசையாழ்ப் பெரும்பாண னெவ்விடையூ றடுத்தாலுந்
தன்னியம நெறியொழுக்கந் தவானென்ப துலகறியப்
பொன்னியலுஞ் சடைமௌலிப் புராணர்திரு விளையாட்டால்
அன்னிலையிற்* கருங்கொண்மூ வார்த்தெழுந்த திசையெல்லாம்.

     (இ - ள்.) இன் இசை யாழ்ப் பெரும் பாணன் - இனிய இசை
யமைந்த யாழில் வல்ல பெருமையையுடைய பாணபத்திரன், எவ்விடையூறு
அடுத்தாலும் - எவ்வகை இடையூறு நேர்ந்தாலும், தன் நியமநெறி ஒழுக்கம்
தவான் என்பது உலகு அறிய - தனது கடப்பா டாகிய ஒழுக்க
நெறியினின்றுந் தவனாற் என்பதை உலகினரனைவரும் அறியுமாறு, பொன்


     (பா - ம்.) * அந்நிலையில்.