அறுபத்துமூன்றாவது
சமணரைக் கழுவேற்றிய படலம்
|
[அறுசீரடியாசிரிய
விருத்தம்] |
பஞ்சவ னடைந்த
நோயைப் பாலறா வாயர் தீர்த்து
நஞ்சணி கண்ட னீறு நல்கிய வண்ணஞ் சொன்னேம்
அஞ்சல ராகிப் பின்னும் வாதுசெய் தடங்கத் தோற்ற
வஞ்சரைக் கழுவே றிட்ட வண்ணமுஞ் சிறிது சொல்வாம். |
(இ
- ள்.) பால் அறாவாயர் - பால்மணம் நீங்காத திருவாயினை
யுடைய ஆளுடைய பிள்ளையார். பஞ்சவன் அடைந்த நோயைத் தீர்த்து -
பாண்டியன் அடைந்த வெப்பு நோயை நீக்கி, நஞ்சு அணிகண்டன் நீறு
நல்கியவண்ணம் சொன்னேம் - நஞ்சினையணிந்த திருமிடற்றினையுடைய
இறைவனது திருநீற்றினை (அவனுக்கு) அளித்தருளிய திருவிளையாடலைக்
கூறினேம்; பின்னும் அஞ்சலராகி - மீண்டும் அஞ்சாதவராய், வாது செய்து
அடங்கத் தோற்ற வஞ்சரை - வாது புரிந்து ஒரு சேரத் தோல்வியுற்ற
வஞ்சகராகிய சமணரை, கழு ஏறிட்ட வண்ணமும் - கழுவில் ஏற்றிய
திருவிளையாடலையும், சிறிது சொல்வாம் - சிறிது கூறுவாம்.
தாம்
ஏவிய மந்திரத் தீயானது பிள்ளையார் திருமடத்திற்
செல்லாமையும், தாம் திருமடத்தில் இட்ட சடத்தீயால் பாண்டியனுக்கு வெப்பு
நோய் உண்டானமையும், தம்மால் தீர்க்கலாகாத அந்நோயைப் பிள்ளையார்
தீர்த்தமையும் கண்டு வைத்தும் அஞ்சிற்றிலராய் வாதிட்டனர் என அவரது
தறுகண்மை மிகுதி கூறுவார் அஞ்சலராகி என்றார். ஏறிட்ட - ஏற்றிய. (1)
தென்னவன்
றேவி யாரு மமைச்சருட் சிறந்த சிங்கம்
அன்னவன் றானுங் காழி யந்தண ரடியில் வீழ்ந்தெம்
மன்னவன் வெப்புங் கூனும் பாசமு மாற்றி னீரே
இன்னமு மடியேம் வேண்டுங் குறைசெயத் தக்க தென்றார். |
(இ
- ள்.) தென்னவன் தேவியாரும் - பாண்டியன் தேவியாராகிய
மங்கையர்க் கரசியாரும், அமைச்சருள் சிறந்த சிங்கம் அன்னவன் தானும் -
மந்திரிகளுள் மேம்பட்ட சிங்கத்தினை ஒத்த குலச்சிறையாரும், காழி
அந்தணர் அடியில் வீழ்ந்து - சீகாழிப் பதியில் திருவவதாரஞ் செய்தருளிய
அந்தணராகிய ஆளுடைய பிள்ளையார் திருவடியில் விழுந்து வணங்கி,
எம்மன்னவன் வெப்பும் கூனும் பாசமும் மாற்றினீர் - எம் அரசனுடைய
வெப்பு நோயையும் உடல் வளைவையும் பாசத்தினையும் போக்கியருளினீர்;
இன்னமும் அடியேம் வேண்டும் குறை செயத்தக்கது என்றார் - இன்னும்
|