பக்கம் எண் :

இசைவாதுவென்ற படலம்449



     (இ - ள்.) யாவரும் - அனைவரும், ஈது செங்கண் ஏறு அழகர்
ஆடல் என்று தெளிந்தனர் - இது சிவந்த கண்களை யுடைய இடபத்தின்
மேல் இவர்ந்தருளும் சோமசுந்தரக்கடவுளின் திருவினையாடலென்று அறிந்து,
ஏத்தி - துதித்து, அங்கண் நாயகர் தம்கருணையின் திறனும்
அருட்பார்வையினையுடைய இறைவரது திருவருளின் திறத்தையும், அடியிவர்
அன்பையும் தூக்கி - அடியாரின் அன்பையும் சீர்தூக்கி, தம் கண் ஆர்
அருவி பெருக - தம் கண்களினின்றும் நிறைந்த ஆனந்த வருவி
பெருக்கெடுக்க, ஆனந்தத் தனிப் பெருஞ் சலதியில் ஆழ்ந்தார் -
இன்பமாகிய ஒப்பற்ற வெரிய கடலுள் அமிழ்ந்தனர்; வங்க மேல் வந்தாள்
பிடர்மிசை இருந்த - மரக்கலத்தில் வந்த ஈழப் பாடினியின் தோளின்மேல்
ஏறி யிருந்த, மாண் இழைவிறலயை - மாட்சிமையுடைய அணிகளை யணிந்த
பாடினியை, மன்னன் - அரசன்.

     ஏற்றழகர் எனற்பாலது தொக்குநின்றது. தெளிந்தனர் : முற்றெச்சம்.
வந்த்ாள் : வினைப்பெயர். (41)

இறக்குவித் தவட்கு முந்தமுத் தார
     மெரிமணிக் கலன்றுகில் வரிசை
பெறக்கொடுத் தேனை யவட்குமுண்
     மகிழ்ச்சி பெறச்சில வரிசைதந் தவையிற்
சிறக்கவந் தொருங்கு வைகிவா னிழிந்த
     தெய்வதக் கோயில்புக் கிருந்த
அறக்கொடி யிடஞ்சேர் பெரும்புல வோர்க்கு
     மருங்கல னாதிக ணல்கா.

     (இ - ள்.) இறக்குவித்து - இறக்கி, அவட்கு - அப்பாடினிக்கு,
முந்த - முற்பட, முத்து ஆரம் - முத்துமாலைகளையும், எரிமணிக்கலன்
- நெருப்புப் போன்ற மணிகளழுத்திய கலன்களையும், துகில் - ஆடை
களையும், வரிசைபெறக் கொடுத்து - வரிசையாகக் கொடுத்து, ஏனைய
வட்கும் - மற்றை ஈழப்பாடினிக்கும், உள் மகிழ்ச்சி பெறச் சில வரிசை
தந்து - உள்ளம் மகிழச் சில வரிசைகளை அளித்து, அவையில் சிறக்க
வந்து ஒருங்கு வைகி - அவையின்கண் மேன்மையுற வந்து அனைவரோடும்
ஒருங்கு எழுந்தருளியிருந்து, வான் இழிந்த தெய்வதக் கோயில்புக்கு இருந்த,
அறக்கொடி இடம்சேர் - தரும வல்லியாகிய இறைவியை இடப்பாதியிற்
கொண்ட, பெரும்புலவோர்க்கும் - பெரும் புலவராகிய சோமசுந்தரக்
கடவுளுக்கும், அருங்கலன் ஆதிகள் நல்கா - அரிய அணிகலன்
முதலியவைகளை அளித்து.

     ஈழப்பாடினி தோற்றவளாயினும் தன்னால் வருவிக்கப்பட்டவளாதலால்
அவட்கும் வரிசை தந்தனன் என்க. அவையில் வந்து ஒருங்கு வைகிப் பின்
கோயில்புக்கிருந்த புலவோர் என்க. (42)