நாற்பத்தைந்தாவது
பன்றிக்கட்டிக்கு முலைகொடுத்த படலம்
|
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
இருளைக்கந்
தரத்தில் வைத்தோன் றன்னிடத் தென்று மன்பின்
தெருளைத்தந் தவட்கு மாறாந் தெரிவையை யிசையால் வெல்ல
அருளைத்தந் தளித்த வண்ண மறைந்தனந் தாயாய்ப் பன்றிக்
குருளைக்கு முலைதந் தாவி கொடுத்தவா றெடுத்துச் சொல்வாம். |
(இ
- ள்.) இருளைக் கந்தரத்தில் வைத்தோன் - நஞ்சினைத் தனது
திருமிடற்றின்கண் வைத்தருளிய சோமசுந்தரக்கடவுள், தன்னிடத்து என்றும்
அன்பின் தெருளைத் தந்தவட்கு - எஞ்ஞான்றும் தன்னிடத்தில் உண்மை
யன்பினை வைத்த பாடினிக்கு, மாறுஆம் தெரிவையை - அவள் பகையாகிய
ஈழப் பாடினியை, இசையால் வெல்ல - இசையினால் வெல்லுமாறு, அருளைத்
தந்து அளித்தவண்ணம் அறைந்தனம் - திருவருளைத் தந்து ஆண்டருளிய
திருவிளையாடலைக் கூறினேம்; தாயாய் - இனி (அப்பெருமானே)
தாய்ப்பன்றியாய் வந்து, பன்றிக் குருளைக்கு முலைதந்து ஆவி கொடுத்தவாறு
- பன்றிக்குட்டிகளுக்கு முலை கொடுத்து உயிரைப் புரந்த திருவிளையாடலை,
எடுத்துச் சொல்வாம் - எடுத்துக் கூறுவோம்.
அன்பின்
தெருள் - தெளிந்த அன்பு; உண்மை யன்பு. குருளை -
குட்டி.
"நாயே பன்றி
புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை யென்ப" |
என்பது தொல்காப்பியம்.
(1)
முறையென விமையோர் வேண்ட முளைத்தநஞ் சயின்று சான்றாய்
உறையென மிடற்றில் வைத்த வும்பரான் மதுரைக் காரந்
திறையென வெறிநீர் வையைத் தெற்கது குருவி ருந்த
துறையென வுளதோர் செல்வத் தொன்மணிமாட மூதூர். |
(இ
- ள்.) இமையோர் முறையென வேண்ட - தேவர்கள் முறையோ
வென்று குறையிரக்க, முளைத்த நஞ்சு அயின்று - கடலிலே தோன்றிய
நஞ்சினை உண்டு, சான்றாய் உறை என - சான்றாக நீ இங்கே தங்குவாய்
என்று, மிடற்றில் வைத்த உம்பரான் - அதனைத் திருமிடற்றின்கண்
வைத்தருளிய சிவலோகநாதன் எழுந்தருளிய, மதுரைக்குத் திறை என ஆரம்
எறி - மதுரைப்பதிக்குத் திறையாக முத்துக்களை வீசும், நீர் - நீரினையுடைய,
வையத் தெற்கது - வையை யாற்றின் தெற்கிலே, ஓர் செல்வம் தொல்மணி
|