[-
வேறு]
|
மனித்த ருக்கர
சாகித் தெவ்
வேந்தர்க்கு மடங்கலாய் மடநல்லார்க்
கினித்த வைங்கணைக் காளையாய்
நிலமகட் கிணர்த்துழா யணிமாலாய்
அனித்த நித்தமோர்ந் திகபரத்
தாசைநீத் தகந்தெளிந் தவர்க்கொன்றாய்த்
தனித்த மெய்யறி வானந்த
மாம்பர தத்துவமாய் நின்றான். |
(இ
- ள்.) (இங்ஙனம் பாண்டியர் கோலம் பூண்ட இறைவன்)
மனித்தருக்கு அரசாகி - மக்களுக்கு மன்னனாகியும், தெவ் வேந்தர்க்கு
மடங்கலாய் - பகை மன்னராகிய யானைகளுக்குச் சிங்கமாகியும், மட
நல்லார்க்கு இனித்த ஐங்கணைக் காளையாய் - மகளிருக்கு இனிமையை
யுடைய ஐந்து பாணங்களையுடைய மதவேளாகியும், நிலமகட்கு இணர்த்துழாய்
அணி மால் ஆய் - புவி மகளுக்குக் கொத்தாகிய துழாய் மாலையையணிந்த
திருமாலாகியும், அனித்தம் நித்தம் ஓர்ந்து - அனித்த நித்தக்
கூறுபாடுகளையுணர்ந்து, இகபரத்து ஆசைநீத்து - இம்மை
மறுமையின்பங்களை வெறுத்து, அகம் தெளிந்தவர்க்கு - மனந்தூய்மை
யெய்திய மெய்ஞ்ஞானியர்க்கு, ஒன்றாய் - ஒன்றாகி, தனித்த மெய் அறிவு
ஆனந்தமாம் பரதத்துவமாய் நின்றான் - ஒப்பற்ற சச்சிதானந்தமாகிய
பரதத்துவப் பொருளாகியும் நின்றருளினான் எ - று.
மனித்தர்
: விரித்தல். அரசாகியென்றதனால் குடிகளைத் தாய் போற்
புரக்கும் தண்ணளியும் நீதியும் முதலிய வெல்லாங்கொள்ளப்படும்.
இச்செய்யுளின் முன்னிரண்டடியோடு,
"தருமன்
றண்ணளி யாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே
அருமை யாலழ கிற்கணை யைந்துடைத்
திரும கன்றிரு மாநில மன்னனே" |
என்னுஞ் சிந்தாமணிச்
செய்யுளை ஒத்து நோக்குக. நில முழுதையும்
தனக்குரிமையாக்கிக் கோடலின் 'மாலாய்' என்றார்; மால் புவி மகட்குக்
கணவனாகலின். அகந்தெளிந்தார்க்குப் பதிப்பொருள் விளங்குதலை,
"திரையற்ற நீர்போற்
சிந்தை தெளிந்தார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யானே" |
என்னும் திருமந்திரத்தாலு
மறிக. பதிப்பொருள் ஒன்றேயாகலின், 'ஒன்றாய்'
என்றார்; இதனை,
"ஒன்றென்ற தொன்றேகா
ணொன்றே பதி" |
எனச் சிவஞானபோதத்துள்
வரும் திருவெண்பா விளங்கவுணர்த்தும். ஆய்
என்னும் செய்தெனெச்சம் ஆம் என்னும் பெயரெச்சங் கொண்டு முடியும்.
தத்துவம் - உண்மை; கடவுளைப் பரதத்துவம் எனக் கூறுவது மரபு.
பலபடப்புனைவணி. (199)
ஆகச்
செய்யுள் - 797.
|