பக்கம் எண் :

460திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கூனை நிமிர்த்தியதால், பிறங்கு கற்ப ஆதி பூதியாவினும் - விளங்காநின்ற
கற்பமுதலிய திருநீறு அனைத்தினும், அவ்வட்டில் வாய்ப்பூதி சிறந்தது -
அம்மடைப்பள்ளிப் பூதியே மேலானது.

     கற்பம் ஆதி கற்பாதி என்றாயிற்று. திருநீறு கற்பம், அநுகற்பம்,
உபகற்பம், அகற்பம் என நால்வகைப்படும் ஆகலின், 'கற்பாதிப்
பூதியாவினும்' என்றார். கற்பம் முதலியவற்றின் இயல்பைச் சைவ சமய நெறி
முதலிய நூல்களானறிக. (82)

                     ஆகச் செய்யுள் - 3, 255.