பக்கம் எண் :

462திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     பொன்மலர் என்றமையின் கைதை செந்தாழையாகும். பொன் -
அழகுமாம். கொடுமை - வளைவு. மனக்கு, அத்துச்சாரியை தொக்கது.
நகைமதிக் கொம்பு. இல் பொருளுவமை. (2)

அத்தன வணிகற் குரியநன் மருக னவன்முதற் கடிமண முடித்தோன்
முத்தமிழ் மதுரைப் பதியுளா னவற்கே முறையினா னோற்றுநான்
                                                பயந்த
வித்தக மயிலைக் கொடுப்பலென் றனைய வியற்குல வணிகர்கோன்
                                              றன்னோ
டொத்தபல் கிளைஞர் யாவரு மறிய வுணர்த்தினான் சிலபகல் கழிய.

     (இ - ள்.) அத்தன வணிகற்கு உரிய நல் மருகன் - அந்தத்
தனவணிகனுக்கு உரிமையுடைய நல்ல மருகனொருவன், முத்தமிழ்
மதுரைப்பதி உளான் - மூன்று தமிழையுடைய மதுரை நகரி லிருந்தனன்;
அவன் முதல் கடிமணம் முடித்தோன் - அவன் முன்பே மணம்புரிந்து
கொண்டவன் (ஆயினும்), அவற்கே - அவனுக்கே, நான் நோற்று பயந்த -
நான் தவங்கிடந்து பெற்றெடுத்த, வித்தக மயிலை முறையினால் கொடுப்பல்
என்று - சதுரப்பாடுடைய மயில்போன்ற புதல்வியை முறைப்படி மணஞ்
செய்து கொடுப்பேனென்று, அனைய வியன்குல வணிகர்கோன் - அந்தச்
சிறந்த குல வணிகர் தலைவன், தன்னோடு ஒத்த பல் கிளைஞர் யாவரும்
அறிய உணர்த்தினான் - தன்னுடன் ஒத்த பல கிளைஞ ரனைவரும் அறியத்
தெரிவித்தான். சில பகல் கழிய - சின்னாட்கள் நீங்க.

     மருகன் - தங்கை மகன். வியன் குலம் என்பது வலித்தலாயிற்று.
கிளைஞர் - ஞாதியரும் சுற்றத்தாரும். (3)

ஊழ்வினை வலியா லாயிரு ரிழந்தர் னுயிர்க்குடம் பனையதன்
                                             கற்பின்
சூழ்கதிர் மணிப்பூண் மனைவியு மிறப்பத் துணிந்தன ளவரிரு
                                             வோர்க்கும்
ஆழ்கடற் கிளைஞர் செயத்தகு கடன்க ளாற்றியச் செய்தியை
                                             மதுரை
வாழ்தரு மருகற் குணர்த்துவா னோலை விடுத்தனர் மருமகன்
                                             வாங்கா.

     (இ - ள்.) ஊழ்வினை வலியால் ஆருயிர் இழந்தான் - பழவினையின்
வலியினாலே தனது அரிய உயிரைத் துறன்தனன்; உயிர்க்கு உடம்பு அனைய
- உயிருக்கு உடல்போன்ற, தன் கற்பின் சூழ்கதிர் மணிப்பூண் மனைவியும் -
அவனது கற்பினையுடைய ஒளிமிக்க மணிகளழுத்திய அணிகளையணிந்த
மனைவியும், இறப்பத் துணிந்தனள் - இறக்கத் துணிந்து விட்டனள்; அவர்
இருவோர்க்கும் - அவரிருவருக்கும், ஆழ் கடல் கிளைஞர் செயத்தகு
கடன்கள் ஆற்றி - ஆழ்ந்த கடல்போன்ற சுற்றத்தார் செய்யத்தகுந்த கடன்களைச் செய்து முடித்து, அச்செய்தியை மதுரைவாழ்தரு மருகற்கு உணர்த்துவான் - அந்தச் செய்தியை மதுரையில் வாழும் அவன் மருகனுக்கு அறிவிக்கும் பொருட்டு, ஓலை விடுத்தனர் - ஓலை எழுதிப் போக்கினர்; மருமகன் வாங்கா - மருமகன் அந்த ஓலையை வாங்கி.

     தன் கருத்து முற்றுப் பெறுமுன் உயிர்துறந்தா னாகலின் 'ஊழ்வினை வலியால்' என்றார். அனைய மனைவியும் கற்பின் மனைவியும் எனக் கூட்டுக. துணிந்து இறந்தனள் என்க. கடன்கள் - அபரக்கிரியைகள். உணர்த்துவான், வினையெச்சம். (4)