(இ
- ள்.) அங்கு உள கிளைஞர் சிலரொடுங் கூடி - அங்குள்ள சில
சுற்றத்தாருடன் சேர்ந்து, அருங்கடி மதுரை நீத்து - அரிய காவலையுடைய
மதுரையை விட்டு, ஏகி - சென்று, பொங்கு இருங்கழி சூழ் பட்டினம் குறுகி
- பொங்குகின்ற பெரிய உப்பங்கழி சூழ்ந்தபட்டினத்தை நெருங்கி, புகுதுவான்
வரவு அறிந்து - அதில் புகுகின்ற வனது வரவினை யறிந்து, அங்குத் தங்கு
தம்கிளைஞர் வினவ நேர்வாரை - அங்கு வசிக்கும் சுற்றத்தவராய்
அச்செய்தியைக் கேட்க வருகின்றவரை, கொங்கு இவர் தனவத்தாரினான் -
மகரந்தம் பரந்த முல்லை மாலையை யணிந்த அவ்வணிகன், தழீஇத் தழீஇத்
செலவிடுத்து ஏகி - தழுவித்தழுவிச் செல்ல விடுத்துச் சென்று, மாமன்
கோயல்புக்கு இருந்தனனாக - மாமன் மாளிகையிற் புகுந்து இருந்தானாக.
புகுவானாயினன்
அங்ஙனம் புகுகின்றவனது வரவினையறிந்த வினவ
நேரும் கிளைஞரை என உரைக்க. துயரம் வினவுவாரும் வினவப்படுவாரும்
தழுவிக்கொள்ளுதல் ஒருசாராரிடைக்காணப்படும் வழக்கம். (7)
[அறுசீரடிய/=ாசிரிய
விருத்தம்.] |
நாள்சில
கழிந்த பின்னர் நாய்கரே றனையா னன்ன
வாள்புரை கண்ணி னாளை மதுரையிற் கொடுபோ யங்கென்
கேளிர்முன் வேட்ப லென்று கிளந்துதன் மாம னீட்டு
நீள்பெரும் பொருள்கண் மற்றுங் கைக்கொண்டு நெறியிற் செல்வான். |
(இ
- ள்.) சிலநாள் கழிந்த பின்னர் - சிலநாட்கள் சென்றபின், நாய்கர்
ஏறு அனையான் - வணிகருள் ஏறுபோல்வானாகிய அவன், அன்ன
வாள்புரை கண்ணினாளை - அந்த வாள்போலுங் கண்களையுடைய
மங்கையை, மதுரையில் கொடுபோய் - மதுரைக்கு அழைத்துக் கொண்டு
போய், அங்கு என் கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து - அங்கு எனது
கிளைஞர் முன்னிலையில் மணஞ் செய்வேனென்று கூறி, தன் மாமன் ஈட்டும்
நீள் பெரும் பொருள்கள் மற்றும் - தனது மாமன் தேடிய மிகப் பெரிய
பொருள்களையும் பிறவற்றையும், கைக்கொண்டு நெறியில் செல்வான் -
கைப்பற்றிக் கொண்டு வழியிற் செல்வானாயினன்.
முன்
மணமுடித்தோனாகலின் மதுரையிலுள்ள கிளைஞர் ஐயுறா
வண்ணம் அவர் முன் இவளை வேட்டல்கருதினான். மற்றும் என்றது ஆடை
அணி முதலியவற்றை. (8)
வழிவிட வருவார் தம்மை நிறுத்திப்பின் மதுரை மூதூர்க்
கெழுதரு சுற்றத் தாரை முன்சென்மி னென்று போக்கித்
தொழுபரி சனமுந் தானுந் தோகையும் வைக லொன்றிற்
கழிவழி யரைமேற் பெய்த காவத மாகப் போவான். |
(இ
- ள்.) வழிவிட வருவார் தம்மை நிறுத்தி - வழிவிட வருகின்ற
வரை நிற்கச் செய்து, பின் மதுரை மூதூர்க்கு எழுதரு சுற்றத்தாரை - பின்
பழைய மதுரைப் பதிக்குப் புறப்படும் கிளைஞர்களை, முன்சென்மின் என்று
போக்கி - முன்னே செல்லுங்களென்று அனுப்பி, தொழு பரிசனமும் தானும்
தோகையும் - தன்னை வணங்கும் ஏவலாளரும் தானும் மங்கையுமாக, வைகல்
ஒன்றில் கழிவழி - நாள் ஒன்றில் நீங்கும் வழி, அரைமேல் பெய்த
காவதமாகப் போவான் - ஒன்றைக் காவதமாகப் போவானாயினன்.
|