பக்கம் எண் :

வன்னியுங் கிணறு மிலிங்கமு மழைத்த படலம்465



     பரிசனமும் தானும் தோகையும் போவான் என்றது பால்விரவிச்
சிறப்பால் ஆண்பால் முடிபு பெற்றமையின் வழுவமைதி;

     "தானும் தன்றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்" என்புழிப்போல.
கழிவழி - கடந்து செல்லும் தூரம். (9)

வெங்கதிர் வேலை செல்லும் வேலைவந் தணையு முன்னம்
இங்கிருந் தொழிக மென்னாப் புறம்பய மூதூ ரெய்தி
அங்கிறை கோயின் முன்னிக் கூவனீ ராடி யங்குத்
தங்கிய வன்னி மாடே போனகஞ் சமைத்துண் டெல்வாய்.

     (இ - ள்.) வெங்கதிர் வேலை செல்லும் வேலைவந்து அணையு
முன்னம் - சூரியன் மேலைக் கடலிற் செல்லும் காலம் வந்து பொருந்து
முன்னரே, இங்கு இருந்து ஒழிகம் என்னா - இங்கே தங்கிச் செல்வேமென்று
கருதி, புறம்பய மூதூர் எய்தி - திருப்புறம்பயமென்னும் பழம்பதியினை
யடைந்து, அங்கு இறை கோயில் முன்னி - அங்குள்ள இறைவன்
திருக்கோயிலை அடைந்து, கூவல் நீராடி - கிணற்றில் நீராடி, அங்குத்
தங்கிய வன்னிமாடே - அங்குள்ள வன்னிமரத் தடியில், போனகம் சமைத்து
உண்டு - உணவு சமைத்து உண்டு, எல்வாய் - அவ்விரவின்கண்.

     வேலை - கடல், பொழுது, புறம்பயம் - சோழநாட்டிலுள்ள தேவாரப்
பாடல்
பெற்ற திருப்பதிகளிலொன்று. (10)

மலைவைத்த சிலையான் கோயின் மருங்கொரு படியி னும்பர்த்
தலைவைத்துத் துயிலு மெல்லை விதிவழிச் சார வந்தோர்
கொலைவைத்த விடவாய் நாகங் கடித்தது கொதித்து நீண்ட
விலைவைத்த கொடும்பூ ணாய்கன் விடந்தலைக் கொண்டு மாய்ந்தான்.

     (இ - ள்.) மலைவைத்த சிலையான் கோயில் மருங்கு - மலையை
வில்லாக வைத்த சிவபெருமான் திருக்கோயிலின் அருகே, ஒரு படியின்
உம்பர் - ஒருபடியின்மேல், தலைவைத்துத் துயிலும் எல்லை - தலைவைத்துத்
தூங்கும்போது, விதிவழி ஊழின் வழியே, சாரவந்து - பொருந்த வந்து, ஓர்
கொலை வைத்த விடவாய் நாகம் கொதித்துக் கடித்தது - கொல்லுதற்கு
வைத்த நஞ்சினையுடைய வாயையுடைய ஒரு பாம்பானது சினந்து கடித்தது;
நீண்ட விலை வைத்த கொடும்பூண் நாய்கன் - பெரிய விலைமதிப்புள்ள
வளைந்த அணியினையணிந்த அவ்வணிகன், விடம் தலைக்கொண்டு
மாய்ந்தான் - அந்நஞ்சு தலைக்கேறி இறந்தான்.

     நாகம் வந்து கொதித்துக் கடித்தது என்க. (11)

அங்குள்ள பரிச னங்க ளாவலித் திரங்கிச் சூழக்
கொங்கைகள் புடைத்துச் சேடிக் குற்றிடை மகளி ரேங்கச்
சிங்கவே றனையா னாகந் தீண்டிடா தொதுங்கிப் போந்த
பங்கய மலர்க்கொம் பன்னாள் பாவைபோற் புறம்பு நின்றாள்.

     (இ - ள்.) அங்குள பரிசனங்கள் ஆவலித்து இரங்கிச் சூழ - அங்கே
யுள்ள ஏவலாளர் அவலமுற்று அழுது சூழாநிற்க, சேடிக் குற்றிடை மகளிர் -
தோழிகளாகிய சிறிய இடையினையுடைய பெண்கள், கொங்கைகள் புடைத்து
ஏங்க - தங்கள் கொங்கைகளில் அடித்துக் கொண்டு அழாநிற்க, போந்த