சாயும்பூங் கொம்பரிற் சூழ்ந்திறந் தான்புறஞ் சார்ந்தழூஉம்
ஆயமென் மகளிர்மீண் டன்பனோ டெங்கைதன் னாவியும்
போயதே கொல்லென மடியுறக் கொடுங்கையாற் புறந்தழீ இத்
தூயதூ செறிந்திளைப் பாற்றினார் சிறிதுயிர் தோற்றவே. |
(இ
- ள்.) சாயும்பூங் கொம்பரில் - வளைகின்ற பூங்கொம்புகளைப்
போல, இறந்தான் புறம் சார்ந்து சூழ்ந்து அழூஉம் - இறந்தவனருகிற் சார்ந்து
சுற்றி நின்று அழுகின்ற, ஆயமென் மகளிர் - மெல்லிய தோழிப் பெண்கள்,
மீண்டு - திரும்பிப் பார்த்து, அன்பனோடு எங்கைதன் ஆவியும் போயதே
கொல் என - அன்பனோடு எமது தங்கையின் உயிரும் போயிற்றோவென்று
கருதி, கொடுங்கையால் மடிஉறப் புறம் தழீஇ - வளைந்த கையால் மடியிற்
பொருந்த அவளுடம்பைத் தழுவி, தூயதூசு எறிந்து இளைப்பு ஆற்றினார் -
தூய்மையான ஆடையால் வீசி இளைப்பினைப் போக்கினர்; சிறிது உயிர்
தோற்ற - அதனால் சிறிது உயிர்ப்பு வெளிப்பட.
உயிர்தோற்ற
இளைப்பாற்றினார் என்றுமாம். (15)
மெய்கழிந் தின்னுயிர் மீண்டுதன் யாக்கையின் மெல்லவே
கைகலந் தாங்கிரு காலியங் குற்றன கண்களும்
பொய்கைநீ லஞ்சிறி தவிழ்ந்தென வலர்ந்தன பூவையை
மைகழி நாண்முத னான்குநால் வேலியாய் வளைந்தவே. |
(இ
- ள்.) மெய்கழிந்த இன் உயிர் - உடலினின்றும் நீங்கிய இனிய
உயிரானது, மீண்டு தன் யாக்கையில் மெல்ல கைகலந்தாங்கு - திரும்பவும்
தனது உடலின் கண் மெல்ல வந்து கலந்தாற்போல, இருகால் இயங்குற்றன -
இரண்டு கால்களும் அசைந்தன; பொய்கை நீலம் சிறிது அவிழ்ந்தென -
பொய்கையின்கண் நீல மலர் சிறிது மலர்ந்தாற்போல, கண்களும் அலர்ந்தன
- கண்களும் சிறிது திறந்தன; பூவையை - அம்மாதினை, மைகழி நாண்முதல்
நான்கும் - குற்றம் நீங்கிய நாணம் முதலிய நான்கும், நால் வேலியாய்
வளைந்த - நான்கு வேலிகளாக வளைந்தன.
கழிந்த
என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது. கைகலத்தல், ஒரு
சொல் நான்கு - நாண், மடம், அச்சம், பயிர்ப்பு. நாண் முதலிய நான்கும்
கற்பு வழுவுறாமற் காப்பனவாகலின் "நால் வேலியாய் வளைந்த" என்றார்.
வளைந்த, அன்பெறாத பலவின்பால் முற்று. (16)
கையெறி யுங்குழற் கற்றைசோ ருந்திரி காறுளி
நெய்யெனக் கண்புனல் கொங்கைமுற் றத்துக நெஞ்சுகும்
பையவாய் விடும்புறம் பார்க்குநா ணெடுந்தளைப் படுஞ்சிறு
தெய்வந்தொட் டாளெனத் தேம்பிவிம் மாந்தொளி தேயுமால். |
(இ
- ள்.) கை எறியும் - நிலத்திற் கையினை மோதுவாள்; குழல்
கற்றை சோரும் - திரண்ட கூந்தல் சோருவாள்; திரிகால்/ நெய்துளி என -
திரி சிந்தும் நெய்த்துளியைப்போல, கண்புனல் கொங்கை முற்றத்து உக
நெஞ்சு உகும் - கண்ணீர் கொங்கையின் முன்றிலிற் சிந்த மனமுடைவாள்;
பைய வாய் விடும் - மெல்ல வாய் திறந்து புலம்பக் கருதுவாள்; புறம்
பார்க்கும் - புறத்திற் பார்ப்பாள்; நாண் நெடுந்தளைப் படும் - நாணாகிய
நீண்ட விலங்கிற் படுவாள்; சிறு தெய்வம் தொட்டாள் என - சிறிய
தெய்வத்தாற் பற்றப் பட்டவளைப்போல, தேம்பி விம்மாந்து ஒளிதேயும் -
தேம்பி விம்மி ஒளி குறைவாள்.
|