(இ
- ள்.) அகில வேதமும் ஆகம பேதமும் - எல்லா வேதங்களும்
பல வகைப்பட்ட ஆகமங்களும், நம்மை சகல சீவதயாபரன் என்று உரை
சால்பால் - நம்மை எல்லா உயிர்களிடத்தும் ஒரே தன்மையான
அருளையுடைய இறைவன் என்று கூறுந் தகுதியால், இகல் இல் -
வெறுப்பில்லாத, சேதனம் அசேதனம் ஆகிய இவை இரண்டும் -
அறிவுள்ளதும் அறிவில்லாததுமாகிய அவ்விரண்டும், புகலில் - கூறுமிடத்து,
எமக்கு வேறு அல - எமக்கு வேறல்ல; பொதுமைய - ஒரு தன்மையனவே;
அதனால் - அக்காரணத்தால்.
சேதனம்
அசேதனமாகிய இரண்டும் எமக்கு வேறல என்பது
வேதாகமங்கள். எம்மைச் சகல சீவதயாபரன் என்றுரைத்தலால் தெளியப்படும்
என்றான் என்பது கருத்தாகக் கொள்க. (5)
தாயி ழந்துவெம் லகஞ்சுடத் தழன்று
காயு மாதபம் புறஞ்சுடக் கானிடைக் கிடந்து
தீயு மேனமென் குருளைக டெருமர விரங்கி
ஆயு மாய்முலை யளித்துயி ரளித்தன மதனால். |
(இ
- ள்.) தாய் இழது வெம்பசித் தழல் அகம் சுட - தாயை இழந்து
கொடிய பசித்தீ அகத்தின்கண் சுட்டு வருத்தவும், தழன்று காயும் ஆதபம்
புறம்சுட - கொதித்து எரிக்கின்ற வெய்யில் புறத்திற் சுட்டு வருத்தவும்,
கானிடைக் கிடந்து தீயும் - காட்டின்கண் பற்றுக் கோடின்றிக் கிடந்து
வெதும்பா நின்ற, ஏனம் மென் குருளைகள் - இளமையாகிய பன்றிக்
குட்டிகள், தெருமர இரங்கி - அங்ஙனம் வருந்தியதனால் இரங்கி, ஆயுமாய்
முலை அளித்து உயிர் அளித்தனம் - தாயுமாகி முலைப்பால் கொடுத்து
உயிரைப் புரந்தனம், அதனால் - அங்ஙனம் நாம் அருளினமையால்,
ஆயும்
என்பதன் உம்மை இழிவு சிறப்பு. (6)
அளவி லாற்றலுந் திறனுநல் லரும்பெறற் கல்வி
விளைவு ஞானமுங் கிடைத்தனர் மீனவற் கினிமேல்
வளைவி லாதகோ லமைச்சராய் வளம்பல பெருக்கிக்
களைவில் பாசநீத் தெம்பெருங் கணத்தவ ராவார். |
(இ
- ள்.) அளவு இல் ஆற்றலும் திறனும் - அளவிறந்த வலியும்
வெற்றியும், பெறல் அரும் நல் கல்வி விளைவும் - பெறுதற்கரிய நல்ல
கல்வியின் முதிர்வும், ஞானமும் - மெய்யுணர்வும், கிடைத்தனர் - கைவரப்
பெற்றனர்; இனிமேல் மீனவற்கு - இனி இராச ராசபாண்டியனுக்கு, வளைவு
இல்லாத கோல் அமைச்சராய் - செங்கோல் ஓச்சும் அமைச்சர்களாகி, பல
வளம் பெருக்கி - பலவகை வளங்களையும் பெருக்கி, களைவு இல் பாசம்
நீத்து - போக்குதற்கரிய பாசங்களை ஒழித்து, எம் பெருங்கணத்தவராவார் -
எமது பெரிய சிவகணத்தவராவர்.
கிடைத்தனர்
- கிடைக்கப் பெற்றனர். வளைவிலாத கோல் -
செங்கோல். (7)
|