நாற்ற டந்திசைத் தயிர்க்கட னனந்தலை நிலங்கீண்
டூற்றெ ழுந்துநாற் கிடங்கரா யுதித்தெழுந் தாங்கு
மாற்ற ருஞ்சுவைத் தீந்தயிர் வாலரிப் பதத்தோ
டேற்றெ ழுந்தது நாற்குழி யிடத்திலும் பொங்கி. |
(இ
- ள்.) நால் தடந்திசை - நான்கு பெரிய திசைகளினுஞ் சூழ்ந்த,
தயிர்க் கடல் - தயிர்க்கடலானது, நிலம் நனந்தலை கீண்டு - பூமியின்
நடுவைக் கிழித்து, ஊற்று எழுந்து நால் கிடங்கராய் உதித்து எழுந்தாங்கு -
ஊறுதலுற்று நான்கு குழிகளாய்த் தோன்றியெழுந்தாற் போல, மாற்று
அறுசுவைத் தீந்தயிர் - நீங்குதல் இல்லாத சுவையினையுடைய தயிர், வால்
அரிபதத்தோடு - வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தோடு, நால்குழி
இடத்திலும் ஏற்று பொங்கி எழுந்தது - நான்கு குழிகளிலும் உயர்ந்து பொங்கி
எழுந்தது எ - று.
மாறு
அரும் என்பது மாற்றரும் என்றாயது; நீக்க வொண்ணாத
என்றுமாம். கீண்டு மரூஉ. கிடங்கர் : போலி. (3)
குரும திக்குல மன்னவன் மருகனக் குண்டப்
பெருவ யிற்றிரு பிறையெயிற் றெரிசிகைப் பேழ்வாய்
ஒருகு றட்குடை வீரனை யுன்பசி தணியப்
பருகெ னப்பணித் தருளலும் பாரிடத் தலைவன். |
(இ
- ள்.) குரு மதி குல மன்னவன் - நிறம் பொருந்திய சந்திர
குலத்தில் வந்த மலயத்துவச பாண்டியனுக்கு, மருகன் - மருகனாகிய சுந்தர
பாண்டியன், அக் குண்டப் பெருவயிற்று - அந்தக் குழிந்த பெரிய
வயிற்றினையும், இரு பிறை எயிற்று - இரண்டு பிறை போலும் வளைந்த
பற்களையும், எரி சிகை - நெருப்புப் போலும் சிகையினையும், பேழ்வாய் -
பிளந்த வாயினையுமுடைய, ஒரு குடை குறள் வீரனை - ஒப்பற்ற குடை
தாங்கி வரும் பூத வீரனை (நோக்கி), உன் பசி தணிய - உன் பசி நீங்குமாறு,
பருகு எனப் பணித்தருளலும் - உண்பாய் என்று கட்டளையிட்டருளலும்,
பாரிடத் தலைவன் - பூதகணத் தலைவனாகிய குண்டோதரன் எ - று.
குரு
- நிறம்; ஒளி; திருமுகப்பாசுரத்தில்,
"குருமா மதிபுரை
குலவிய குடைக்கீழ்" |
என வருதலுங் காண்க.
பருகென்பது ஒரோ விடங்களில் பொது வினையாயும் வரும். (4)
அத்த யிர்ப்பதக்
கிடங்கரி லலைகடல் கலக்கும்
மத்தெ னக்கரம் புதைத்தெடுத் தெடுத்துவாய் மடுத்துத்
துய்த்தி டப்பசி விடுத்தது சுருதிநா யகன்றாட்*
பத்தி வைத்துவீ டுணர்ந்தவர் பழவினைத் தொடர்போல். |
(பா
- ம்.) * சுந்தரன்றாளில்.
|