பக்கம் எண் :

484திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



வாலவாயில் எழுந்தருளிய ஒப்பற்ற இறைவனும், இமையா அங் கயல்
கண்ணியுடன் உறை ஒருவனை - இமையாத அங்கயற்கண்ணியுடன்
உறைகின்ற ஒருவனுமாகிய சோமசுந்தரக் கடவுளை, சென்னிமேல் பன்னிரண்டு
உம்பர் ஒன்ற வைத்து - முடியின் மீது பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்
பொருந்த வைத்து, நினைந்தான் - தியானித்தான்.

     அருள்கனிந் தொழுகத் திருவாய்மலர்ந்த வாசகமும் என்று
மாறுதலுமாம். சென்னி - பிரமரந்திரம். பன்னிரண்டு உம்பர் - துவாதசாந்தம்.
இறைவனும் இறைவியும் துவாதசாந்தத்தில் இருத்தலை,

"உயிர்த்துணையாந் தோன்றாத் துணைக்கோர் துணையாகித்
துவாதசாந்தப் பெருவெளியிற் றுரியங்கடந்த பரநாத
மூலத்தலத்து முளைத்த முழுமுதலே"

எனக் குமரகுருபர வடிகள் மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழில் அருளிச்
செய்தலானு மறிக. ஆலவாயாகிய திருப்பதி எனக் கொண்டு, அஃது
அண்டத்தில் துவாத சாந்தத்தலம் எனப்படுமாகலின் அதனைப்
பிண்டத்தினுள்ளே துவாதசாந்தத்துடன் ஒன்றவைத்து ஆண்டு
அங்கயற்கண்ணியுடன் உறை ஒருவனை நினைந்தான் என்றுரைத்தலுமாம். (54)

பரவச மடைந்து வழிகவர்ந் துண்ணும் பழிப்புல வேடர்போ
                                        யொளிப்ப
இருள்வெளி கடந்து திருவருள் வழிச்சென் றெண்ணிலாச் சராசர
                                        மனைத்தும்
புரையற நிறைந்து காட்சிகண் காண்பான் புதைபடத் தனித்தபூ
                                         ரணமாய்
உரையுணர் விறந்த வுண்மையா னந்த வுணர்வினை யுணர்வற
                                         நினைந்தான்.

     (இ - ள்.) பரவசம் அடைந்து - சிவகரணம்பெற்று, வழிகவர்ந்து
உண்ணும் பழிப்புல வேடர்போய் ஒளிப்ப - ஆறலைத் துண்ணுகின்ற
பழிமிக்க ஐம்புல வேடர்கள் போய் மறைய, இருள் வெளி கடந்து - கேவல
சகல அவத்தைகளைக் கடந்து, திருவருள் வழிச்சென்று - திருவருளின்
வழியே சென்று, எண் இலாச் சர அசரம் அனைத்தும் நிறைந்து - அளவிறந்த
இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய அனைத்திலுங் குற்றமற
நிறைந்து, காண்பான் காட்சி கண்புதைபட - காண்பானுங் காட்சியுங் காட்சிப்
பொருளு மறைய, தனித்த பூரணமாய் - ஒப்பற்ற பூரணவடிவாய், உரை
உணர்வு இறந்த உண்மை ஆனந்த உணர்வினை - மாற்றமு மனமுங் கழிய
நின்ற சச்சிதானந்த வடிவினை, உணர்வு அற நினைந்தான் - இடையறாது
தியானித்தான்.

     புலம் - பொறி. வழிகவர்ந்துண்ணும் வேடர்போலும் ஐயம்பொறிகள்
என்க;

     "ஐம்புல வேடரி னயர்ந்தனை"

எனச் சிவஞான போதம் கூறுவதுங் காண்க. ஆன்மா இச்சை
ஞானக்கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதுமின்றி ஆணவ மலத்தால் மறைப்புண்டு
நிற்பது கேவலம் ஆகலின் அதனை 'இருள்' என்றும், மாயேயமாகிய
தநுகரண புவன போகங்களைப் பொருந்தி இச்சை ஞானக் கிரியைகள் சிறிது
விளங்கப் பெற்று நரகொடு சுவர்க்கம் நானிலங்களிற் போக்குவரவு புரிவது
சகலம் ஆகலின் அதனை 'வெளி' என்றும் கூறினார்; எனவே
நின்மலாவத்தையை யெய்தி என்றவாறு அவனருளே கண்ணாகக்
காண்பார்க்கன்றி இறைவன்அறியவாரானாகலின் 'திருவருள் வழிச்சென்று'
என்றார். சென்று