நாற்பத்தேழாவது
கரிக்குருவிக் குபதேசஞ்செய்த படலம்
|
[கொச்சகக்கலிப்பா]
|
வரிக்குருகிப்
பத்திரற்குப் பலகையிட்ட மணிகண்டன்
அரிக்குருளை வடிவான வடல்வீரர்க் கரசன்பார்
பரிக்குமமைச் சியலளித்த பரிசுரைத்தாம் பசுபதிபாற்
கரிக்குருவீ குருமொழிகேட் டருளடைந்த கதைபகர்வாம். |
(இ
- ள்.) வரிக்கு உருகிப் பத்திரத்திற்குப் பலகையிட்ட மணிகண்டன்
- இசைப் பாட்டிற்கு நெகிழ்ந்து பாணபத்திரனுக்குப் பலகையிட்டருளிய
நீலமணி போலுந்திருமிடற்றினையுடைய இறைவன், அரிக்குருளை வடிவான
அடல் வீரர்க்கு - பன்றிக் குட்டிகளின் வடிவாகிய வெற்றி வாய்ந்த
பன்னிரண்டு வீரர்களுக்கும், அரசன் பார்பரிக்கும் அமைச்சு இயல் அளித்த
பரிசு உரைத்தாம் - பாண்டியனது நாட்டினை ஓம்பும் அமைச்சியலை
அளித்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்; பசுபதியால் -
அவ்விறைவனிடத்து, கருக்குருவி குரு மொழி கேட்டு அருள் அடைந்த கதை
பகர்வாம் - கயவாயென்னும் பறவை குரு மொழியினைக் கேட்டு அவன்
திருவருளைப் பெற்ற திருவிளையாடலை (இனிக்) கூறுவோம். வரி -
இசைப்பாட்டு. அரி - பன்றி. பசு - பாசத்தாற் கட்டுண்ட உயிர்கள்; பசுபதி -
ஆன்மகோடிகளுக்கெல்லாம் இறைவன். (1)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
மன்னவ
னிராச ராசன் வானவர்க் கரச னான
பின்னவன் குமர னான பெருவலி மடங்க லன்னான்
துன்னல ரடுபோர் சாய்க்குஞ் சுகுணபாண் டியனீர் ஞாலம்
இன்னறீர்த் தறக்கோ லோச்சி யீர்ங்குடை நிழற்று நாளில். |
(இ
- ள்.) மன்னவன் இராசராசன் - வேந்தனாகிய இராசராச
பாண்டியன், வானவர்க்கு அரசனான பின் - இந்திர பதவியைப் பெற்ற
பின்னர், அவன் குமரனான சுகுண பாண்டியன் - அவன் புதல்வனாகிய
சுகுண பாண்டியனென்பான், துன்னலர் அடுபோர் சாய்க்கும் பெருவலி
மடங்கல் அன்னான் - பகைவரது அடுகின்ற போரினை அழிக்கும் பெரிய
வலியினையுடைய சிங்கம் போல்வனானாய், நீர் ஞாலம் இன்னல் தீர்த்து -
கடல் சூழ்ந்த புவியிலுள்ள உயிர்களின் துன்பத்தைப் போக்கி, அறக்கோல்
ஓச்சி - செங்கோல் நடாத்தி, ஈர் குடை நிழற்றும் நாளில் - தண்ணிய
குடையால் நிழலைச் செய்யுங் காலையில்.
|