[கொச்சகக்கலிப்பா]
|
கோட்டஞ்
சிலைவளைத்த கூடற் பிரானாடல்
கேட்டஞ் செவிபடைத்த பேறடைந்தேங் கேட்டபடி
நாட்டங் களிப்ப நறுமலர்தூய்க் கண்டிறைஞ்ச
வேட்டங்கள் யாங்களென வோதினார் மெய்த்தவரே. |
(இ
- ள்.) கோடு அம் சிலை வளைத்த கூடல்பிரான் ஆடல் -
மேருமலையை அழகிய வில்லாக வளைத்த நான்மாடக் கூடலின்
நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களை, கேட்டு
அம்செவி படைத்த பேறு அடைந்தேம் - கேட்டதனால் அழகிய
செவிகளைப் படைத்த பயனைப் பெற்றோம்; கேட்டபடி - கேட்டவண்ணமே,
நாட்டம் களிப்பக் கண்டு - கண்கள் களிப்பக் கண்டு, நறுமலர்தூய் இறைஞ்ச
- நறிய மலர்களை யிட்டு வணங்குதற்கு, யாங்கள் வேட்டங்கள் என -
யாங்கள் விரும்பினோ மென்று, மெய்த்தவர் ஓதினார் - அவ்வுண்மைத்
தவமுடைய முனிவர்கள் கூறினார்கள்.
கோடு
- சிமயம்; மலைக்கு ஆகுபெயர், கோட்டஞ்சிலை என்புழி
டகரம் விரித்தல்; மலையாகிய சிலையை என்றுமாம். அஞ்செவி - அகஞ்
செவி என்றுமாம். வேட்டங்கள், யாங்கள் என்பவற்றில் கள் அசை. (3)
என்ற வறவோ ரெதிரே முகமலர்ந்து
குன்ற மடக்குங் குறுமுனிவன் கூறுவான்
நன்றுமுனி காளிதனை நானுள்ளத் தெண்ணியாங்
கொன்றமொழிந் தீரென்றான் பின்னும்வியந் தோதுவான்.
|
(இ
- ள்.) என்ற அறவோர் எதிரே - என்று கூறிய முனிவர்கள்
முன்னே, குன்றம் அடக்கும் குறுமுனிவன் முகமலர்ந்து கூறுவான் -
விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவன் முகமலர்ந்து கூறுவானாயினன்;
நன்று முனிகாள் - முனிவர்களே நன்று, நான் உள்ளத்து எண்ணியாங்கு -
யான் எனது மனத்தில் நினைத்தவண்ணமே, இதனை ஒன்ற மொழிந்தீர்
என்றான் - இதனைப் பொருந்த வுரைத்தீரென்று கூறி, பின்னும் வியந்து
ஓதுவான் - பின்னும் வியந்து கூறுவானாயினன்.
அகத்தியர்
விந்தமலையை அடக்கிய வரலாற்றைக் கந்தபுராணத்து
விந்தம் பிலம் புகு படலத்திற் காண்க. என்றான், முற்றெச்சம். வியக்க
என்பது வியந்து எனத் திரிந்தது எனலுமாம். (4)
பண்ணான் மறைமுடியுந் தேறாப் பரசிவனை
எண்ணா லளவிறந்த வெக்கலையாற் கண்டுமுளக்
கண்ணா லறியாதார் வீட்டின்பங் காண்பரோ
மண்ணாதி யாறாறு நீத்ததனி மாதவரே. |
(இ
- ள்.) மண் ஆதி ஆறாறும் நீத்ததனி மாதவரே - மண்முதலிய
முப்பத்தாறு தத்துவங்களையும் களைந்த பெருந்தவத்தினையுடைய
முனிவர்களே, பண் நால் மறைமுடியும் தேறாப் பரசிவனை - இசையமைந்த
நான்கு மறைகளின் அந்தமுங் கண்டறியாத பரசிவத்தை, எண்ணால் அளவு
இறந்த எக்கலையால் கண்டும் - எண்ணினால் அளவில்லாத எந்தக்
கலைகளின் உணர்வினாற்கண்டு வைத்தும், உளக்கண்ணால் அறியாதார் -
உள்ளக் கண்ணினால் அறியாதவர், வீட்டு இன்பம் காண்பரோ -
முத்தியின்பத்தைக் காண்பார்களோ (காணார் என்றபடி).
|