குமரனான
பாண்டியன் அடுபோர் சாய்க்கும் பாண்டியன் எனத் தனித்
தனி இயைத்தலுமாம். அறக்கோல் - அறத்தின் வழுவாத கோல்; செங்கோல்.
(2)
ஆற்றல்சா
லொருவன் மேனா ளாற்றவு மறனே யாற்றி
மாற்றமில் சிறிது பாவஞ் செய்ததன் வலத்தால்* வந்து
தேற்றமில் கயயவா யாகிச் செனித்தலாற் காக மாதி
கூற்றென வூற்றஞ் செய்யக் குருதிசோர் தலைய தாகி. |
(இ
- ள்.) ஆற்றல் சால் ஒருவன் - வலிமைமிக்க ஒருவன், மேல்
நாள் - முன் பிறப்பில், அறன் ஆற்றவும் ஆற்றி - அறத்தை மிகவுஞ் செய்து,
மாற்றம் இல் சிறிது பாவம் செய்து - மாறுதலில்லாத சிறிது பாவத்தையுஞ்
செய்து, அதன் வலத்தால் வந்து - அதன் வலியால் வந்து, தேற்றம் இல்
கயவாயாகி - அறிவில்லாத கரிக்குருவியாய், செனித்தலால் - பிறத்தலால்,
காகம் ஆதி - காக்கை முதலிய பறவைகள், கூற்றென ஊற்றம் செய்ய
கூற்றுவனைப் போல (அதற்கு) இடையூற்றினை விளைக்க, குருதி சோர்
தலையதாகி - (அதனால் அது) குருதி வடிகின்ற தலையினையுடைதாகி.
மாற்றம்
இல் - தன் பயனை விளைத்தன்றி நீங்குதல் இல்லாத அது
என்னும் எழுவாய் வருவித்துரைக்க. (3)
புட்கெலா மெளிதா
யூறு பாடஞ்சிப் புரத்துள்வைகி
உட்கிநீள் வனத்துட் போகி வழிமருங் கொருசார் நிற்கும்
கட்கவிழ்ந் தொழுகப் பூத்த கவிழிணர் மரமேல் வைகி
வெட்கமீ தூரச் சாம்பி வெய்துயிர்த் திருக்கு மெல்லை. |
(இ
- ள்.) புட்கு எலாம் எளிதாய் - பறவைகள் அனைத்திற்கும் எளிய
பறவையாய், ஊறுபாடு அஞ்சி - (அவை செய்யும்) இடையூற்றினுக்குப் பயந்து,
புரத்துள் வைகி - ஊருள் இருந்து, உட்கி - (பின் அங்கிருத்தற்கும்) அஞ்சி,
நீள்வனத்துள் போகி - நீண்ட காட்டினுட் சென்று, வழி மருங்கு ஒரு சார்
நிற்கும் - வழியருகின் ஒரு புறத்தில் நிற்கும், கள்கவிழ்ந்து ஒழுகப் பூத்த
கவிழ் இணர் மரமேல் வைகி - தேன் கவிழ்ந்து ஒழுகுமாறு மலர்ந்த கவிழ்ந்த
பூங்கொத்துக்களையுடைய மரத்தின் மேலே தங்கி, வெட்கம் மீதூரச் சாம்பி -
நாணம் மீதுரச் சோர்ந்து, வெய்துயிர்த்து இருக்கும் எல்லை - சுடுமூச்செறிந்து
இருக்குமளவில்.
புரம்
- ஊர். சாம்பி - கூம்பி. (4)
விடையவ னீறு பூசு மெய்யவன் பூண்ட கண்டித்
தொடையவன் புறம்பு முள்ளுந் தூயவன் குடையுங் கையில்
உடையவன் றரும தீர்த்த யாத்திரை யொழுக்கம் பூண்ட
நடையவ னொருவ னந்த நறுந்தரு நிழலிற் சார்ந்தான். |
(பா
- ம்.) * செய்தந்த வலத்தால். +புறத்துள்.
|