எண்ணால் என்பதற்குத்
தருக்கத்தால் என்றும், கருதலளவையால் என்றும்
உரைத்தலும் பொருந்தும். உளக்கண் என்றது பரஞானத்தை. இறைவனை
அபர ஞானத்தால் அறிந்து வைத்தும் பரஞானத்தாற் காணாதவர் வீட்டின்பம்
காணார் என்றார். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியாதத்துவம்
ஏழும், சுத்த தத்துவம் ஐந்தும் என்பார் ஆறாறும் என்றார். எல்லாத்
தத்துவங்கட்கும் கீழாகவுள்ளது மண் ஆகலின் மண்ணாதி என்றார்.
நீத்தலாவது தத்துவங்களை ஒரோவொன்றாகக் கண்டு அவற்றி னியல்பை
யறிந்து களைந்து அவற்றின் வேறாக ஆன்மாவாகிய தன்னை அறிதல்.
மாதவரே என்பதில் ஏகாரம் விளி. (5)
அஞ்செவியி
லூறுபடக் கேட்டபடி யாலவாய்ப்
பஞ்சமுகச் சோதிப் பரனைப்போ யர்ச்சித்து
நெஞ்சநெகக் கண்டு நினையா வழிநினைந்து
வஞ்சவினை வேர்களைவான் வம்மின்க ளென்றானே. |
(இ
- ள்.) அஞ்செவியில் ஊறுபடக் கேட்டபடி - அகஞ் செவியில்
அழுந்தக் கேட்ட வண்ணமே, ஆலவாய்ப் பஞ்சமுகச் சோதிப் பரனை -
திருவாலவாயி லெழுந் தருளிய ஐந்து திருமுகங்களையுடைய ஒளி
வடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளை, போய் அர்ச்சித்து - அங்குச்
சென்று அருச்சித்து, நெஞ்சம் நெகக் கண்டு - நெஞ்சு நெக்குவிட் டுருகத்
தரிசித்து, நினையா வழி நினைந்து - (முன்னொரு காலத்தும்) நினையாத
திருவருள் வழியே நினைந்து, வஞ்சவினை வேர்களைவான் வம்மின்கள்
என்றான் - வஞ்சித்துப் பிறவியிற் செலுத்தும் வினைகளுக்கு மூலமாகிய
ஆணவத்தைப் போக்குதற்கு வருவீராக வென்று கூறினான்.
ஊறுபட
- நன்கு பொருந்த. ஊறு, முதனிலை திரிந்த தொழிற் பெயர்.
பஞ்ச முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம்
என்பன. வினையை வேரொடுங் களைய என்றுமாம். களைவான், வினை
யெச்சம். வம்மின்கள், கள் அசை. (6)
மங்கல வோரை
வருதினத்தில் வானிழிந்த
கங்கை படிந்துலக நாயகனைக் கைதொழுது
புங்கவர்முன் சங்கற்பஞ் செய்தனுச்சை பூண்டொழுகி
அங்கவர்வா யாசி மொழிகேட் டகமகிழ்ந்தே. |
(இ
- ள்.) புங்கவர் - வசிட்டர் முதலிய முனிவர்கள், அங்கு அவர்
முன் சங்கற்பம் செய்து - அவ்விடத்தில் அவ்வகத்திய முனிவர்முன்
சங்கற்பஞ் செய்துகொண்டு வாய் ஆசி மொழி கேட்டு - அவர் வாயிலிருந்து
வரும் வாழ்த்துரையைக் கேட்டு, அக மகிழ்ந்து அனுச்சை பூண்டு ஒழுகி -
மன மகிழ்ச்சி விடை பெற்றுச் சென்று, மங்கல ஓரை வருதினத்தில் -
மங்கலமான நல்லோரை வரும் நாளில், வான் இழிந்த கங்கை படிந்து -
வானி னின்றும் இழிந்த கங்கையில் நீராடி. உலக நாயகனைக் கைதொழுது -
விசுவநாதனைக் கையாற் றொழுது.
ஓரை
- முழுத்தம். உலக நாயகன் - விச்சுவநாதன்; வாரணாசியில்
எழுந்தருளி யிருக்கும் பெருமான். புங்கவர் அங்கு அவர் முன் என மாறுக.
சங்கற்பம் நீராடற் பொருட்டும் தலயாத்திரையின் பொருட்டும் செய்தா
ரென்க. அனுச்சை - உடன்பாடு; அநுக்ஞை என்பதன் சிதைவு. (7)
|