(இ
- ள்.) விடையவன் நீறுபூசும் மெய்யவன் - இடபவூர்தியையுடைய
இறைவனது திருநீற்றினை அணிந்த மெய்யினையுடையவனாய், பூண்ட கண்டித்
தொடையவன் - உருத்திராக்க மாலையையுடையவனாய், புறம்பும் உள்ளும்
தூயவன் - புறமும் அகமுந் தூய்மையுடையவனாய், கையில் குடையும்
உடையவன் - (இவையே யன்றிக்) கையின்கண் குடையும் உடையவனாய்,
தரும தீர்த்த யாத்திரை ஒழுக்கம் பூண்ட நடையவன் ஒருவன் - தூயய
நதிகளிற் சென்று நீராடு ஒழுக்கத்தை மேற்கொண்ட நடையினையுடைய
ஒருவன், அந்த நறுந்தரு நிழலில் சார்ந்தான் - அந்த நறிய மர நிழலை
அடைந்தான்.
தரும
தீர்த்தம் - புண்ணிய தீர்த்தம். நடையவன் - நடந்து
செல்லுதலையுடையவன். (5)
இருந்தவன் சிலரை நோக்கி யியம்புவா னெவர்க்கும் பேறு
தருந்தலந் தீர்த்த மூர்த்தித் தன்மையிற் சிறந்த வன்பு
வருந்தமிழ் மதுரை பொற்றா மரைத்தடஞ் சுந்த ரேசப்
பெருந்தகை யென்று சான்றோர் பேசுவ ராத லாலே. |
(இ
- ள்.) இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் - (அங்ஙனஞ்
சார்ந்து) இருந்த அப்படிவத்தன் அங்குள்ள சிலரைப் பார்த்துக் கூறுவான்;
எவர்க்கும் பேறு தரும் - யாவர்க்கும் விரும்பிய பயன்களை நல்கும், தலம்
தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த - தலமும் தீர்த்தமும் மூர்த்தியுமாகிய
தன்மையிற் சிறந்தன, அன்பு வருந்தமிழ் மதுரை - (முறையே) அன்பு
வளர்தற்குரிய தமிழையுடைய மதுரையும், பொற்றாமரைத்தடம் - பொற்றாமரை
வாவியும், சுந்தரேசப் பெருந்தகை என்று - சோமசுந்தரப் பெருமானும் என்று,
சான்றோர் பேசுவர் ஆதலால் - பெரியோர் கூறுவர் ஆதலால்.
இருந்தவன்
என்பதனை இரட்டுறமொழிதலாக்கி இருந்த பெரிய
தவவொழுக்க முடையான் என்றுரைக்க. தலத்தன்மை தீர்த்தத் தன்மை
மூர்த்தித் தன்மையிற் சிறந்த தலமும் தீர்த்தமும் மூர்த்தியும் என
விரித்துரைக்க. (6)
ஓரிடத் தினைய மூன்று* விழுப்பமு முள்ள தாகப்
பாரிடத் தில்லை யேனைப் பதியிடத் தொன்றே யென்றுஞ்
சீருடைத் தாகுங் கூடற் செழுநக ரிடத்தம் மூன்றும்
பேருடைத் தாகு மென்றாற் பிறிதொரு பதியா தென்றான். |
(இ
- ள்.) ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளதாக -
ஒரேயிடத்தில் இந்த மூன்று சிறப்பும் உடையதாக, பாரிடத்து இல்லை -
இந்நிலபுலகின் கண் (வேறுபதி) இல்லை; ஏனைப்பதி இடத்து - மற்றைப்
பதிகளில், என்றும் ஒன்றே சீர் உடைத்தாகும் - எஞ்ஞான்றும் அம் மூன்றில்
ஒன்றே சிறப்புடையதாகும்; கூடல் செழுநகர் இடத்து - கூடலாகிய செழிய
பதியின்கண், அம்மூன்றும் பேர் உடைத்தாகும் என்றால் - அம்மூன்றுந்
(பா
- ம்.) * அனைய மூன்று.
|