இறைவன் திருமுன் சென்று,
பார்த்தன் பணிந்த பதமு அன்பு உருவாய்ப்
பணிந்து - அருச்சுனன் வழிபட்ட திருவடிகளில் அன்புருவாய் வணங்கி,
ஆடி - கூத்தாடி, ஆர்த்து - முழக்கஞ் செய்து, அளவாத கீதம் பாடித்
துதித்தான் - அளவில்லாத கீதங்களைப் பாடித் துதித்தான் எ - று.
தீர்த்தன்
- தூயன், உயிர்களின் அழுக்கைப் போக்குவோன். கூர்த்தல்
- துதித்தற்கு முற்படல்; தழுதழுத்தலுமாம். பார்த்தன் - அருச்சுனன்; பிருதை
மைந்தன் என்னும் பொருட்டு; தத்திநாந்தம். பிருதை - பாண்டுவின் மனைவி.
அருச்சுனன் சிவபெருமானைக் குறித்து அருந்தவம் புரிந்து பாசுபதம் பெற்ற
சிவபத்தனாகலின் 'பார்த்தன் பணிந்த பதம்' என்றார்; சிவபெருமான்
வேடுருத்தாங்கிச் சென்று அருச்சுனற்கு அருள் புரிந்த செய்தி திருமுறைகளிற்
பலவிடத்துப் பயின்றுளது;
"ஏவார்சிலை
யெயினன் னுருவாகி யெழில்விசயற்
கோவாத வின்னருள் செய்தவெம் மொருவற்கிடம்" |
என்பது ஆளுடைய
பிள்ளையார் திருவாக்கு. அளவிலாத என்பது
அளவாத என நின்றது. (25)
பாட்டின் பொருளா ளவன்பாரிட வீரன் பாடல்
கேட்டின்ப மெய்திக் கணங்கட்குக் கிழமை நல்கி
மோட்டின் புனன்மண் முறைசெய் திருந்தா னளகக்
காட்டின் புறம்போய் மடங்குங் கயற் கண்ணி யோடும். |
(இ
- ள்.) பாட்டின் பொருளானவன் - சொல்லின் பொருளாயுள்ள
சுந்தர பாண்டியனாகிய இறைவன், பாரிட வீரன் பாடல் கேட்டு - பூதப்படை
வீரனாகிய குண்டோதரன் பாடலைக் கேட்டு, இன்பம் எய்தி - இன்புற்று,
கணங்கட்குக் கிழமை நல்கி - பூதகணங்களுக்குத் தலைமையாம் உரிமையைத்
தந்தருளி, அளகக் காட்டின் புறம் போய் மடங்கும் கயல் கண்ணியோடும் -
கூந்தலாகிய காட்டின் பக்கத்திற் சென்று மீளும் கயல் போன்ற
கண்ணையுடைய பிராட்டியோடும், மோட்டின் புனல் மண் முறை செய்து
இருந்தான் - பெருமையையுடைய கடலாற் சூழப்பட்ட நிலவுலகைச்
செங்கோன் முறை புரிந்து வீற்றிருந்தான் எ - று.
பாட்டு
- சொல்; இறைவி சொல் வடிவும் இறைவன் பொருள்
வடிவுமாகலின் 'பாட்டின் பொருளானவன்' என்றார். பண்ணின்
பயனாயுள்ளவன் என்னலுமாம். தலைமையாங் கிழமையென்க. மோடு -
பெருமை; முதுமையுமாம். இன் சாரியை. (26)
[அறுசீரடியாசிரியவிருத்தம்]
|
தீர்த்த
னிதழிச் சடைநின்று மிழிந்து வரலாற் சிவகங்கை
தீர்த்த னுருவந் தெளிவோர்க்கு ஞானந் தரலாற் சிவஞான
தீர்த்தங் காலிற் கடுகிவரு செய்தியாலே வேகவதி
தீர்த்தங் கிருத மாலையென வையை நாமஞ் செப்புவரால். |
|