பக்கம் எண் :

அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம்493



     (இ - ள்.) தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் -
இறைவனது கொன்றை மாலையையணிந்த சடையினின்றும் இறங்கி வருதலால்,
சிவகங்கை - சிவகங்கை எனவும், தீர்த்தன் உருவம் தெளிவோர்க்கு -
இறைவன் எண்வகை உருவங்களில் இஃது ஒன்று எனத் தெளிகின்றவருக்கு,
ஞானம் தரலால் சிவஞான தீர்த்தம் - ஞானத்தை அருளுவதால் சிவஞான
தீர்த்தம் எனவும். காலில் கடுகி வரு செய்தியாலே - காற்றைப் போல
விரைந்து வருகின்ற செய்கையாலே, வேகவதி தீர்த்தம் - வேகவதி ஆறு
எனவும், கிருதமாலை என - (செய்யப்பட்ட மாலை போல மதுரைப் பதியைச்
சூழ்ந்து வருதலால்) கிருத மாலை எனவும், வையை நாமம் செப்புவர் -
வையை நதிக்குப் பெயர் கூறுவர் பெரியோர் எ - று.

     என வென்பது சிவகங்கை முதலியவற்றோடும் சென்று இயையும்.
கிருதமாலையென்னும் பெயர்க்கு ஏது வருவித்துரைக்கப்பட்டது. ஆல் :
அசை. (27)

ஆகச் செய்யுள் - 874.