பக்கம் எண் :

மலயத்துவசனை யழைத்த படலம்505



அடைவான், கண்கள் (தம்) பயனைப் பெறுமாறு, எதிர் கண்டனன் - நேரே
கண்டான் எ - று.

     அடைவான் இரண்டும் வினையெச்சம். எழு கடலுங் கூடிய
பொய்கையின் பக்கத்தே யிருந்த இறைவனைக் கடல் வாய் அமுதென
நயம்படக் கூறினார். எண் பேறடையா - அளவறுப்பதற் கரிய என்றபடி.
அருளையுடைய அமுதென்னலுமாம். இது வெனா என்பது விகாரமாயிற்று. (11)

வந்தான் மருகன் சரணம் பணிவான்
முந்தா முனமா மனெனும் முறையால்
அந்தா மரையங் கையமைத் துமகட்
டந்தா னையெதிர்ந் துதழீஇ யினனால்.

     (இ - ள்.) வந்தான் - (அங்ஙனம் கண்டு) வந்த மலயத்துவச
பாண்டியன், மருகன் சரணம் பணிவான் முந்தா முனம் - மருகனுடைய
திருவடிகளை வணங்க முற்படுமுன்னே, மாமன் எனும் முறையால் - மாமன்
என்ற முறையினால், அம் தாமரை அங்கை அமைத்து - அழகிய தாமரை
மலர் போன்ற கைகளால் தடுத்து, மகள் தந்தானை எதிர்ந்து தழீஇனன் -
மகட்கொடை நேர்ந்தானாகிய அம்மலயத்துவசனைச் சுந்தரபாண்டியன்
எதிர்ந்து தழுவினான் எ - று.

     முந்துமுனம் எனற்பாலது வழக்கால் முந்தாமுனம் என நின்றது. கை
அமைந்து - கையின் சைகையால் தடுத்து. ஆல் : அசை (12)

ஆத்தன் றிருவுள் ளமகிழ்ந் தருளாற்
பார்த்தன் புநிரம் பியபன் னியொடுந்
தீர்த்தம் புகுந்தா டியசெல் கவெனப்
பூத்தண் பொருநைப் புனனா டவனும்.

     (இ - ள்.) ஆத்தன் திருவுள்ளம் மகிழ்ந்து - இறைவனாகிய சந்தர
பாண்டியன் திருவுள்ளங் களித்து, அருளால் பார்த்து - அருளால் நோக்கி,
அன்பு நிரம்பிய பன்னியொடும் - (உம்) அன்பு நிறைந்த மனைவியாரொடும்,
தீர்த்தம் புகுந்து ஆடிய செல்க என - தீர்த்தத்தை யடைந்து ஆடுதற்குச்
செல்லக் கடவீரென்று கட்டளையிட, பூத்தண் பொருநைப் புனல் நாடவனும்
- மலர்களையுடைய குளிர்ந்த பொருநை யாற்றின் நீர்வள மிக்க பாண்டி
நாட்டையுடைய மலயத்துவச பாண்டியனும் எ - று.

     ஆத்தன் - பரமாத்தனாகிய சிவபெருமான். ஆடிய : செய்யிய
வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (13)

முன்னைத் தவமெய் திமுயன் றுபெறும்
அன்னப் பெடையன் னவள்வந் தெதிரே
தன்னைத் தழுவத் தழுவிக் கிரிவேந்
தென்னக் குறையா மகிழ்வெய் தினனே.