(இ
- ள்.) முன்னை - முற்பிறப்பில், தவம் எய்தி முயன்று பெறும் -
தவங்கிடந்து அரிதிற் பெற்ற, அன்னப் பெடை அன்னவள் - பெண் அன்னம்
போன்ற பிராட்டியார், எதிரே வந்து தன்னைத் தழுவி - எதிரில் வந்து
தன்னைத் தழுவ, தழுவி - தானுந் தழுவி, கிரிவேந்து என்னக் குறையா
மகிழ்வு எய்தினன் - மலையரையனைப் போலக் குறையாத மகிழ்ச்சியை எய்தி
எ - று.
மலையலையன்
பிராட்டியை மகவாகப் பெற்று மகிழ் கூர்ந்தவனாகலின்
கிரிவேந்தென்ன என்றார். (14)
தண்டே மொழிவேள் விதவக் குறையாற்
கண்டே னிலனென் றுகருத் தவலம்
உண்டே யஃதிவ் வுவகைக் களிதேன்
வண்டே யெனவுண் டுமறந் தனனால். |
(இ
- ள்.) தண் தேம் மொழி வேள்வி - தண்ணிய தேன் போலும்
மொழியினையுடைய புதல்வியாரின் திருமணக் கோலத்தை, தவக் குறையால்
கண்டேன் இலன் என்று - தவத்தின் குறைவினால் காணப் பெற்றிலேனென்று,
கருத்து அவலம் உண்டே - (தன்) உள்ளத்தே கவலையுண்டன்றே, அஃது -
அதனை, இ உவகைக் களிதேன் வண்டே என உண்டு - இம் மகிழ்ச்சியாகிய
களிப்பைத் தரும் மதுவை வண்டு போலப் பருகி, மறந்தனன் - மறந்தான்
எ - று.
தேமொழி
: அன்மொழித் தொகை. உவகை, பிராட்டியும் பெருமானும்
உடனிருந்த திருக்கோலத்தைக் கண்டமையா லாயது. தேமொழியை
விளியாக்கி மறந்தேன் என்றுரைப்பாருமுளர்; இதற்கு, என்று கூறினான் என
வருவித்து முடித்தல் வேண்டும். ஆல் : அசை. (15)
சேணுற் றவனைச் சிலநாள் கழியக்
காணுற் றவள்போ னிறைகற் புடையாள்
பூணுற் றுமலர்ந் ததொர்பொற் கொடிபோல்
நாணுற் றெதிர்நண் ணியிறைஞ் சினளால். |
(இ
- ள்.) சேண் உற்றவனை - தூரத்தே சென்ற தலைவனை, சில
நாள் கழிய - சில காலம் நீங்க, காணுற்றவள் போல் - கண் தலைவியைப்
போல, நிறை கற்பு உடையாள் - நிறைந்த கற்பினை யுடைய காஞ்சனமாலை,
பூண் உற்று - மங்கல நாண் முதலய அணிகள் அணிந்து (விளங்கி),
மலர்ந்தது ஓர் பொன் கொடிபோல் எதிர் நண்ணி - மலர்ந்ததாகிய ஒரு
பொற் கொடிபோல எதிர் சென்று, நாண் உற்று இறைஞ்சினள் -
நாணமடைந்து வணங்கினாள் எ - று.
சேணுற்றவன்
- பொருளீட்டல் முதலியன குறித்து நாடிடை யிட்டும்
காடிடை யிட்டும் பிரிந்து சென்ற தலைவன். நாணுதல், கற்புடைய மகளிர்க்கு
இயல் பாயதோர் பண்பு. ஆல் : அசை. (16)
மஞ்சோ தியகாஞ் சனமா லைகையிற்
பைஞ்சோ திவிளங் குபவித் திரையாய்ச்
செஞ்சோ திமுடீச் சிவநா மவெழுத்
தஞ்சோ திநெடுங் கடலா டுமரோ. |
|