(இ
- ள்.) மஞ்சு ஓதிய காஞ்சனமாலை - முகில் போலுங் கூந்தலை
யுடைய காஞ்சனமாலை, கையில் பைஞ்சோதி விளங்கு பவித்திரையாய் -
(தனது) கையில் பசிய ஒளி விளங்கும் பவித்திரத்தை உடையவளாய்,
நெஞ்சோதி முடி - சிவந்த ஒளியினையுடைய சடை முடியையுடைய, சிவநாம
எழுத்து அஞ்சுஓதி - சிவபெருமானது திருநாமமாகிய திருவைந்தெழுத்தையும்
செபித்து, நெடுங்கடல் ஆடு - நெடிய கடலின்கண் மூழ்கத் தொடங்குவாள்
எ - று.
ஓதிய
: குறிப்புப் பெயரெச்சம். பவித்திரம் - தருப்பையினாற்
செய்யப்பட்டது. சிவனது நாமம் என விரிக்க. திருவைந் தெழுத்துச்
சிவபிரானது நாமம் என்பதனை
"நாத னாம நமச்சி
வாயவே"
"திருநாம மைந்தெழுத்துஞ் செப்பா ராகில்" |
என்னும்
தமிழ் மறைகளா னறிக. அரோ : அசை. (17)
துங்கக் கலைவே தியர்தொன் மறைநூற்
சங்கற் பவிதிப் படிதன் றுணைகை
அங்கைத் தளிர்பற் றியகத் துவகை
பொங்கப் புணரிப் புனலா டினளே. |
(இ
- ள்.) துங்கக் கலை வேதியர் - உயர்ந்த கலைகளை உணர்ந்த
அந்தணர் (கூறிய), தொல் மறை நூல் சங்கற்ப விதிப்படி - பழைய வேத
நூலின் சங்கற்ப முறைப்படி, தன் துணை கை - தன் நாயகன் கையை,
அம் கைத் தளிர் பற்றி - (தனது), அழகிய கையாகிய தளிராற்
பிடித்துக்கொண்டு, அகத்து உவகை பொங்க - மனத்தின்கண் மகிழ்ச்சி
மீக்கூர, புணரிப்புனல் ஆடினள் - கடல் நீரில் ஆடினாள் எ - று.
தளிராற் பற்றி யென மூன்ற னுருபு விரிக்க. (18)
டைந்தார் கரையே றினர்கொன் றைமுடி
மிடைந்தார் கருணைக் கண்விழிக் கமலம்
உடைந்தா ரனைமா ருதரங் குறுகா
தடைந்தா ருமைபா கரருட் படிவம். |
(இ
- ள்.) குடைந்தார் கரை ஏறினர் - நீராடிக் கரை யேறிவராகிய
காஞ்சனமாலையும் மலயத்துவச பாண்டியனும், கொன்றைமுடி மிடைந்தார்
- கொன்றை மாலையை முடியின்கண சூடினவராகிய சுந்தரேசர்,
கருணைக்கண் விழிக் கமலம் உடைந்தார் - திருவருள் நோக்கஞ்
செய்தலாலே பாசம் ஒழிந்தவர்களாய், அனைமார் உதரம் குறுகாது -
தாய்மாரின் கருப்பத்திற் புகுதலில்லையாக, உமை பாகர் அருள் படிவம்
அடைந்தார் - உமையொரு பாகரது கருணை வடிவத்தைப் பெற்றார்கள்
எ - று.
உமைபாகர்
என்றமையால் காஞ்சனமாலை உமையின் உருவினையும்,
மலயத்துவசன் சிவபிரான் உருவினையும் பெற்றனராவர் என உரைப்பாருமுளர். விழிக்க -
விழித்தலால் : செயவெனெச்சம் காரணப் பொருட்டு. குடைந்தார்
உடைந்தார் என்பன முற்றெச்சம். (19)
|