ஒண்கொண் டன்மிடற் றொளியும் மொருநால்
எண்கொண் டபுயத் தெழிலும் மழல்சேர்
கண்கொண் டநுதற் கவினும் பொலியா
மண்கண் டுவியப் பவயங் கினரால். |
(இ
- ள்.) ஒண் கொண்டல் மிடற்று ஒளியும் - ஒள்ளிய முகில்
போன்ற திருமிடற்றின் ஒளியும், ஒரு நால் எண் கொண்ட புயத்து எழிலும் -
ஒரு நான்கு என்னும் எண்ணைக்கொண்ட புயங்களின் எழுச்சியும், அழல்
சேர்கண் கொண்ட நுதல் கவினும் நெருப்பினைப் பொருந்திய
கண்ணையுடைய நெற்றியின் அழகும் ஆகிய இவைகளால், பொலியா -
பொலந்து, மண் கண்டு வியப்ப வயங்கினர் - மண்ணுலகத்தார் கண்டு
வியக்குமாறு விளங்கினர் எ - று.
இவற்றால்
என மூன்றனுருபு விரிக்க; மிடற்றொளி முதலியவற்றைச்
சினையெனக் கொண்டு, சினைவினை முதலொடு முடிந்த தென்னலுமாம்.
மண் : ஆகுபெயர், ஆல் : அசை. (20)
விண்ணின் றுவழுக் கிவிழுங் கதிர்போற்
கண்ணின் றநுதற் கருணா கரன்வாழ்
எண்ணின் றபுரத் தினிழிந் திமையா
மண்ணின் றதொர்தெய் வவிமா னமரோ. |
(இ
- ள்.) விண் நின்று வழுக்கி விழும் கதிர்போல் - வானினின்றும்
நழுவி நிலமிசை விழுகின்ற சூரியனைப்போல, கண்நின்ற நுதல் கண்
நிலைபெற்ற நெற்றியையுடைய, கருணாகரன் வாழ் - கருணைக்கு
உறையுளாகிய சிவபெருமான் வீற்றிருக்கும், எண் நின்ற புரத்தின் மதிக்கத்தக்க சிவலோகத்தினின்றும்,
ஓர் தெய்வ விமானம் இழிந்து - ஒரு தெய்வத்
தன்மையையுடைய விமானம் இறங்கி, இமையா - ஒளி வீசி, மண் நின்றது -
மண்ணுலகில் நின்றது எ - று.
கருணாகரன்
- கருணைக்கு ஆகரமானவன்; ஆகரம் - சுரங்கம்.
இமையா : செய்யா வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஓர் : விகாரம்.
அரோ : அசை. (21)
அத்தெய் வவிமா னமதுத் திடலும்
முத்தெய் வதமுக் கணவன் பணியால்
நத்தெய் வதருக் கரனங் கையொடும்
எத்தெய் வதமுந் தொழவே றினனால். |
(இ
- ள்.) அ தெய்வ விமானம் அடுத்திடலும் - அந்தத் தெய்வ
விமானம் வந்தவுடன், மு தெய்வத முக்கணவன் - மூன்று தெய்வங்களை
மூன்று கண்களாகவுடைய சிவபெருமான், பணியால் - ஆணையால், ந தெய்வ
தரு கரன் - உயர்ந்த தெய்வத் தன்மை பொருந்திய கற்பகத்தருப் போன்ற
(கொடைக்) கையையுடைய மலயத்துவச பாண்டியன், நங்கை யொடும் -
மனைவியோடும், எ தெய்வமும் தொழ ஏறினன் - எல்லாத் தெய்வங்களும்
வணங்க ஏறினன் எ - று.
|